Motorola Edge 50 Fusion Launch: மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் இந்தியாவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனை ஸ்மார்ட் போனின், விலை மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
மே 18, சென்னை (Technology News): மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான எட்ஜ் 50 ஃப்யூஷனை (Edge 50 Fusion) கடந்த மே 16-ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் போன், பட்ஜெட் விலையில் வாங்குபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
இதன் தொடக்க விலை 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் உள்ள ஸ்மார்ட் போன் ரூ.22,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.20,999-க்கு விற்பனை செய்கிறது. மேலும், 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் ரூ.24,999 விலையில் உள்ளது. ஆனால், அதே அறிமுக சலுகை காரணமாக, ரூ.22,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரூ.2,000 தள்ளுபடி மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் பெற முடியும். Headless Skeleton: எரிந்த நிலையில் தலையில்லா எலும்புக்கூடு; பழனியில் பரபரப்பு சம்பவம்..!
சிறப்பம்சங்கள்:
இதில், Snapdragon 7s Gen 2 பிராசஸர் உடன், 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5-இன்ச் வளைந்த OLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 50MP பிரதான சென்சார் (Sony's LYTIA 700C), அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் உடன் மூன்று கேமரா அமைப்பு மற்றும் 32MP செல்பி கேமராவும் உள்ளது. 5000mAh பேட்டரி திறன் மற்றும் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் வருகின்ற மே 22-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், மோட்டோரோலா இணையதளம் மற்றும் சில முன்னணி சில்லறை விற்பனை கடைகளிலும் விற்பனைக்கு வரும்.