மே 18, பழனி (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கோரிக்கடவு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்களை புதைப்பதற்கு மட்டுமே அனுமதி இருக்கின்றது. எரிக்கும் வழக்கம் உடையவர்கள், பழனியில் உள்ள நவீன எரிவாயு மயானத்திற்கு கொண்டு சென்று உடலை தகனம் செய்யலாம். Car - Lorry Collision: சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்து; எதிரே வந்த லாரி மோதி 5 பேர் பலி..!
இந்நிலையில், நேற்று மாலை ஆடு மேய்க்க சென்ற சிலர் சுடுகாடு பகுதியில் எரிந்த நிலையில் தலையில்லாத உடல் பகுதி (Headless Body On Fire) மட்டும் எலும்பு கூடாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, இதுகுறித்து கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் தலை இல்லாத எலும்புக்கூடை கைப்பற்றி, அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
மேலும், இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பல்வேறு கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.