Nissan Layoffs: ஆயிரம் பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த நிசான்; அதிர்ச்சியில் ஆடிப்போன ஊழியர்கள்..!
தாய்லாந்தில் நிசான் மோட்டார் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் அல்லது இடமாற்றம் செய்ய உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 26, பாங்காக் (Technology News): நிசான் மோட்டார் (Nissan Motor) தனது வணிகத்தில் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்ள ஒரு பெரிய மறுசீரமைப்பு திட்டத்தை வெளியிட்டது. சுமார் 9,000 பேரை பணிநீக்கம் (Layoffs) செய்யவும் மற்றும் உலகளாவிய உற்பத்தி திறன் 20% குறைப்பு ஆகியவற்றை அறிவித்தது. சீனா, வட அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய சந்தைகளில் விற்பனை குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளரின் சிஇஓ மகோடோ உச்சிடா (CEO Makoto Uchida), அவரது மாதாந்திர இழப்பீடு 50 சதவீதம் குறைக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. How to Avoid Mobile Phone Heating: உங்களின் ஸ்மார்ட்போன் அதிகம் சூடு ஆகிறதா? இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்க.!
இந்நிலையில், தாய்லாந்தில் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் அல்லது இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் தற்போது, குறைந்து வரும் லாபத்தைக் கையாள்வதோடு, செலவினங்களை நிர்வகிப்பதற்கான மறுசீரமைப்பைப் பரிசீலித்து வருகின்றது. தனது உலகளாவிய பணியாளர்களை 7 சதவீதம் அல்லது 9,000 ஊழியர்களை மார்ச் 2027-யில் முடிவடையும் 2026 நிதியாண்டுக்குள் குறைக்கும் நோக்கில் உள்ளது.
தாய்லாந்து கார் சந்தையில் ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், சீன உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் நாட்டில் அதிக இடத்தைப் பெற்றதால், நிசான் நிறுவனம் விற்பனையில் சரிவைக் கண்டனர். தாய்லாந்தில் நிசான் விற்பனை 29.7 சதவீதம் சரிந்து 2022-23 நிதியாண்டில் 14,224 வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.