Smartphones (Photo Credit: Pixabay)

நவம்பர் 26, சென்னை (Technology News): இன்றளவில் ஸ்மார்ட்போன்கள் என்பது ஒவ்வொரு விஷயத்திற்கும் அத்தியாவசியமான இடத்தை பெற்றுள்ளது. ஒருதகவலை கண்டறியவும், பகிரவும் என ஸ்மார்ட்போன் புதிய பரிணாம வளர்ச்சியை உலகுக்கு வழங்கி இருக்கிறது. இவ்வாறான ஸ்மார்ட்போன்கள் அதன் விலை, தரம் உட்பட பல்வேறு காரணிகளால் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றில் ஒருசில ஸ்மார்ட்போன்கள் தனது இயல்பான செயல்பாடுகளால் சாதாரணமாகவே அதிக சூடு (How to Reduce Mobile Heat) அடையும். அதற்கான தீர்வை தரும் விதமாக உங்களுக்காக இந்த செய்தித்தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

வெயில் தருணங்களில் கவனம்:

ஸ்மார்ட்போன்களை நாம் நேரடியான சூரிய ஒளியில் இயக்குவதை தவிர்க்க வேண்டும். இது சாதனம் அதிக சூடு அடையாமல் பாதுகாக்கும். கோடைகாலத்தில் அட்டை அல்லது பைகளில் ஸ்மார்ட்போன்களை வைத்து எடுத்துச் செல்லலாம். ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் போது, பகல் நேரங்களில், வெயில் சுட்டெரிக்கும் தருணங்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் ஸ்மார்ட்போனின் வெப்பம் கடுமையான அளவு உயராமல் இருக்கும். இது நேரடியாக ஸ்மார்ட்போனின் வாழ்நாளை நீட்டிக்க காரணியாக அமைகிறது. Winter Car Care Tips: அடிக்கிற குளிர்ல உங்க கார் ஸ்டார்ட் ஆகலையா? கவலையே வேண்டாம்.. இதை பண்ணுங்க.! 

ஸ்மார்ட் ஆப்களையும் கண்காணியுங்கள்:

ஸ்மார்ட்போன் தொடர்ந்து சூடாகினால், அதன் பேட்டரி திறன் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் ஸ்மார்ட்போனில் சூடு தென்படும் பட்சத்தில் விசிறி, ஏசி போன்ற இடங்களில் அதனை பயன்படுத்தாமல் நெட்ஒர்க், வை-பை, புளூடூத், லொகேஷன் போன்றவற்றை அனைத்து வைக்கலாம். நாம் பயன்படுத்தும் ஆப்களின் செயல்பாடுகள், அதன் இயக்கம் தொடர்பானவற்றை கண்காணித்து, ஸ்மார்ட்போனின் வெப்ப அளவை குறிக்கலாம்.

எளிமையான குறிப்புகள்:

மொபைல் செயல்பாடுகளின் போது, நாம் ஒரு செயலியை பயன்படுத்திவிட்டு, நேரடியாக மற்றொரு செயலியை பயன்படுத்த நேரிடும். இவ்வாறான தருணத்தில் அதிக செயலியை பேக்ரவுண்டில் இயங்க அனுமதிப்பது, ஸ்மார்ட்போனின் செயல்பாடுகளை குறைத்து, அதிக வெப்பத்தை ஏற்படுத்தவும் வழிவகை செய்யும். லொகேஷன், புளூடூத் உட்பட பிற சேவையை தொடர்ந்து அணைக்காமல் அப்படியே பயன்படுத்துவதும் ஸ்மார்ட்போனை விரைந்து சூடாக்கும். இதனால் பல ஆண்டுகள் உழைக்க வேண்டிய ஸ்மார்ட்போன், தனது ஆயுட்காலத்தை குறைக்கும்.