ISRO PROBA-3 Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்..!

ஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ISRO PROBA 3 Launch (Photo Credit: @ISROSpaceflight X)

டிசம்பர் 05, ஸ்ரீஹரிகோட்டா (Technology News): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஓர் அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL)அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக ப்ரோபா-3 (PROBA-3) எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (ESA) நிறுவனம் வடிவமைத்தது. அதன்படி, ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து நேற்று (டிசம்பர் 04) மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ISRO PSLV C 59: திடீர் தொழில்நுட்ப கோளாறு; ப்ரோபா 3 பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தம் - இஸ்ரோ அறிவிப்பு.!

இந்நிலையில், கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது. பிஎஸ்எல்வி சி59 (PSLV-C59) ராக்கெட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் செயற்கைகோளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே ஏவுதல் நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ அறிவித்தது. இதனையடுத்து, இன்று மாலை ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. சி59 ராக்கெட் இன்று (டிசம்பர் 05) சரியாக மாலை 4.04 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்: