டிசம்பர் 04, ஸ்ரீஹரிகோட்டா (Technology News): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஓர் அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (New Space India Limited) அமைப்பு மூலமாக, வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ESA) வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் (PSLV Rocket) வாயிலாக விண்ணில் செலுத்த, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (NSIL) அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது.
கவுண்டவுன் தொடங்கியது:
அதன்படி, ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் (Sriharikota) உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து ப்ரோபா-3 செயற்கைக்கோள் (PROBA-3), பிஎஸ்எல்வி - சி59 (PSLV - C59) ராக்கெட் மூலமாக இன்று (டிசம்பர் 04) மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று (டிசம்பர் 03) மாலை 3.08 மணிக்கு தொடங்கியது.எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். PROBA-3 Mission: இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட்.. சூரியனை நோக்கி கிளம்பும் செயற்கைக்கோள்..!
தொழில்நுட்ப கோளாறு:
ப்ரோபா-3 இரட்டை செயற்கைக்கோள் பூமியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, செயற்கைகோளில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.
நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது:
இதனால் இன்று மாலை 04:08 மணிக்கு ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில், இறுதி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதன் காரணமாக நிர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோளாறு சரி செய்யப்பட்டு, நாளை மாலை 04:12 மணிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி 59 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி பயணிக்கவுள்ள பாதையின் மாதிரி:
⏳ T-minus 60 minutes!
Countdown is progressing smoothly as PSLV-C59, an initiative led by NSIL and supported by ISRO’s expertise, prepares to launch ESA’s Proba-3 satellites into a highly elliptical orbit.
💡 Launch Highlights:
Launch Pad: First Launch Pad, SDSC-SHAR
Payload:… pic.twitter.com/8qxtzitiIq
— ISRO (@isro) December 4, 2024
நாளை விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட்:
Due to an anomaly detected in PROBA-3 spacecraft PSLV-C59/PROBA-3 launch rescheduled to tomorrow at 16:12 hours.
— ISRO (@isro) December 4, 2024