PROBA-3 Mission: இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட்.. சூரியனை நோக்கி கிளம்பும் செயற்கைக்கோள்..!

ஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

PROBA-3 Mission (Photo Credit: @isro X)

டிசம்பர் 04, ஸ்ரீஹரிகோட்டா (Technology News): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஓர் அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (New Space India Limited) அமைப்பு மூலமாக, வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ESA) வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் (PSLV Rocket) வாயிலாக விண்ணில் செலுத்த, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (NSIL) அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது. Landslide: பல்லுயிரைக் கொல்லும் நிலச்சரிவு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? முழு விபரம் உள்ளே.!

அதன்படி, ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் (Sriharikota) உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து ப்ரோபா-3 செயற்கைக்கோள் (PROBA-3), பிஎஸ்எல்வி - சி59 (PSLV - C59) ராக்கெட் மூலமாக இன்று (டிசம்பர் 04) மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று (டிசம்பர் 03) மாலை 3.08 மணிக்கு தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த ப்ரோபா-3 இரட்டை செயற்கைக்கோள் பூமியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கு 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif