Landslide (Photo Credit: LatestLY)

டிசம்பர் 03, டெல்லி (Science News): வங்கக்கடல் பகுதியில் உருவாகி, தமிழகத்தின் வடமாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) புரட்டியெடுத்தது. குறிப்பாக திருவண்ணாமலை (Tiruvannamalai Rains), கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத மழை-வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தாழ்வான இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலின் மழைகொடுக்கும் மேகங்கள் ஒவ்வொரு மாவட்டத்தையும் வெள்ளத்தில் தத்தளிக்க வைத்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலச்சரிவு எவ்வாறு ஏற்படுகின்றன என்பதனைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

நிலச்சரிவு (Landslide): பூமிக்கு அடியில் இருக்கக் கூடிய பாறைகள் அல்லது மணல் பரப்புகள் நகர்வதால் நிலச்சரிவு ஏற்படுகிறது. குறிப்பாக மலைப்பாங்கான இடங்களில் இவை ஏற்பட்டு சேதங்களை ஏற்படுத்துகின்றன. இவை ஏற்படுவதற்கு பல்வேறு புவியியல், உருவவியல், நீரியல், நிலநடுக்கம் மற்றும் தட்பவெட்பம் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் மனிதர்களின் செயல்பாடுகளும் காரணமாக அமைகின்றன. பொதுவாகப் பனிமலைகள் உருகுவது, அதீத மழைப்பொழிவு, மணல் அரிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் நிலச்சரிவுக்கு வழிவகுக்கின்றன. PAN 2.0: பழைய பான் கார்டு இனி தேவைதானா? PAN 2.0 திட்டம் என்றால் என்ன? அப்ளை செய்வது எப்படி? விவரம் உள்ளே..!

நிலச்சரிவை தடுப்பதற்கான வழிகள்: பட்டகாலிலே படும் என்பது போல ஏற்கெனவே நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தில் மறுபடி நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் உண்டு. அதேநேரம் நிலச்சரிவு முன்னறிவிப்பு தொழில்நுட்பம் தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே அதிகம் மழை பொழியும் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் முன்னெச்சரிக்கையாக செயல்பட முடியும். மேலும் மலைப்பகுதிகளில் மரங்களை வளர்ப்பதன் மூலம் நிலச்சரிவினை தடுக்கலாம். ஏனெனில் மரத்தின் வேர்கள் அங்குள்ள மண்களை இறுக்கிப்பிடித்துக் கொள்ளும். எனவே ஆழமாக வேரூன்றக் கூடிய சோலை மரங்களை மலைப்பகுதிகளில் வளர்ப்பது மிகவும் அவசியமாகும்.