Realme C63: பட்ஜெட் விலையில் புதிய ரியல்மி சி63 ஸ்மார்ட் போன் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

இந்தோனேசியாவில் ரியல்மி சி63 ஸ்மார்ட் போன், பட்ஜெட் விலையில் பல அசத்தலான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Realme C63 (Photo Credit: @FoneArena X)

ஜூன் 01, சென்னை (Technology News): ரியல்மி நிறுவனம் அதன் புதிய ரியல்மி சி63 (Realme C63 Smart Phone) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனை பட்ஜெட் விலையில், இந்தோனேசிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதி, 16GB RAM (8+8), 50MP கேமரா மற்றும் IP54 ரேட்டிங் ஆகியவை இதன் மிக முக்கிய சிறப்பம்சங்களாகும். மேலும், இந்தியாவில் இதனை கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இதில் பார்ப்போம்.

விலை: இந்த போனின் அடிப்படை மாடல் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இதன் விலை IDR 1,999,000. இந்திய மதிப்பில் சுமார் 10,250 ரூபாய். அடுத்த மாடல் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட போனின் விலை சுமார் IDR 2,299,000, அதாவது இந்தியாவில் ரூ.11,790 ஆகும். லெதர் ப்ளூ மற்றும் ஜேட் கிரீன் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. Benefits Of Peanuts: நிலக்கடலையில் உள்ள பயன்கள் என்னென்ன..! விவரம் உள்ளே..!

சிறப்பம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன், 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளேவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை LCD பேனலில், 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 560nits பிரகாசத்தை ஆதரிக்கின்றது.

இது ஆண்ட்ராய்டு 14-யில் இயங்குகிறது. UNISOC T612 octa-core உள்ளது. மேலும், 1.8 GHz வரை கடிகார வேகத்தில் இயங்குகின்றது. கிராஃபிக்ஸுக்கு, மொபைலில் Mali-G57 GPU கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் 6GB ரேம் மற்றும் 8GB ரேம் என இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 8GB டைனமிக் ரேமை ஆதரிக்கின்றது. மேலும், கூடுதலாக 16GB ரேமின் ஆற்றலை பெறலாம்.

இரண்டாம் நிலை AI லென்ஸுடன், 50MP பிரதான சென்சார் கொண்டது. 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இதில், 5,000mAh பேட்டரி திறன் கொண்ட 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட் போனின் பின்புறம் லெதர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. Air gestures மற்றும் மினி கேப்சூல் 2.0 போன்ற அம்சங்களுடன், IP54 சான்றிதழை பெற்றுள்ளது.