Peanuts (Photo Credit: Pixabay)

ஜூன் 01, சென்னை (Health Tips): நிலக்கடலையில் (Peanuts) இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவற்றை தினமும் உட்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தினசரி நிலக்கடலையை சீரான அளவில் உட்கொள்வதல் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நீரழிவு நோயை தடுக்கும்: இதில், மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக, பெண்கள் நிலக்கடலையை (Groundnut) தொடர்ந்து சாப்பிட்டுவர, எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பித்தப்பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால், பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டது. Father Hanging Suicide: பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை; ஜாமீனில் வெளிவந்த தந்தை தூக்குப்போட்டு தற்கொலை..!

இனப்பெருக்கம்: போலிக் ஆசிட் (Folic Acid) அதிகம் இருப்பதால், இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. இதனைத்தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன், கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இதய நலம் காக்கும்: நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கின்றது.

இளமையை பராமரிக்கும்: இதில், பாலிபீனால்ஸ் (Polyphenols) என்ற ஆண்டி-ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகின்றது.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்: மூளை வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின் 3 நியாசின் நிலக்கடலையில் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் மற்றும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கின்றது. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தத்தை போக்கும்: நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்து உள்ளது. இது, செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகின்றது. மேலும் மூளை நரம்புகளை தூண்டி, மனஅழுத்தத்தை போக்குகிறது.