Apartment Elevator Safety: லிப்டில் சிக்கிக் கொண்டால் செய்ய வேண்டியது என்ன? மக்களே தெரிஞ்சு வச்சிக்கோங்க..!
லிப்டில் சிக்கிக் கொண்டால் செய்ய வேண்டியது என்ன என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
நவம்பர் 22, டெல்லி (Technology News): நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ண முடியாத அளவு பெருகிவிட்டது. மூன்று அல்லது நான்கு தளத்திற்கு மேல் கட்டப்படும் கட்டடங்களில் லிஃப்ட் (Apartment Elevator) என்பது கட்டாயமாக அமைக்கப்படுகிறது. லிஃப்டுகளின் தேவையைப் பொருத்து எண்ணிக்கையும் எடை திறனும் அமைக்கப்படுகிறது. லிஃப்டுகள் சரியாக இயங்கினாலும் கூட 3 அல்லது 4 மாதத்திற்கு ஒரு முறை என பராமரிக்க வேண்டும். எவ்வித கதவுகளாக இருந்தாலும் தினமும் கதவுகள் சரியாக இயங்குகிறதா என கவனிக்க வேண்டும். லிஃப்ட்டினுள் அலார மணி, அழைபேசி போன்றவை அமைக்க வேண்டும்.
லிப்டில் சிக்கிக் கொண்டால் செய்ய வேண்டியவைகள்:
- லிஃப்டில் செல்லும் போது மின்சாரம் துண்டிப்பினாலோ அல்லது வேறு கோளாரின் காரணமாகவோ லிஃப்ட் பாதியில் நின்றுவிட்டால் முதலில் அதிகம் பதட்டப்படக்கூடாது. பயத்தினால் அதிகமாக பதட்டம் ஏற்படும் இதனால் அடுத்து என்ன செய்வது என்று எதும் யோசிக்க இயலாது. தற்போது வரும் மார்டன் லிஃப்டுகள் ஸ்பிரிங் குஷன் ஷாக் அப்ஸ்ர்வர்களை கொண்டு வருகிறது. இது லிஃப்ட் கீழே விழுந்தாலும் உள்ளிருப்பர்களுக்கு ஆபத்து நேராமல் தாங்கி பிடிக்கும் விதத்தில் உள்ளது என்பது நினைவிருக்கட்டும். Stock Market Crash: லஞ்சம் கொடுத்த கௌதம் அதானி: சரிந்த பங்குகள்.. அதலபாதாளம் சென்ற இந்திய பங்குச்சந்தை..!
- லிஃப்டில் இருட்டாக இருந்தால் தங்களின் மொபைல் வெளிச்சத்தைப் பயன்படுத்த வேண்டும். லிஃப்டில் உள்ள அலாரமணி பட்டனை மற்றும் அழைபேசி பட்டனையும் அழுத்த வேண்டும். மொபைலில் சிக்னல் இருக்கிறதா என பார்க்கவும். சிக்னல் இருந்தால் அந்த கட்டடத்தில் தெரிந்தவர் யாரேனும் இருந்தால் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டும் அல்லது உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
- கதவுகளை திறப்பதற்கான அனைத்து முயற்சியையும் செய்ய வேண்டும். கதவு திறக்கும் பட்டனை அழுத்த வேண்டும். அதைவிடுத்து மேல் ஏறி தப்பிக்கலாம் என்று எதுவும் செய்யக் கூடாது. ஒரு ஒரு தளத்திற்கான பட்டனை அழுத்த வேண்டும். லிஃப்ட் இயங்கவில்லை என்றால் யாரேனும் உதவிக்கு வரும் வரை பொறுமையாக இருக்கவேண்டும்.
- கதவுகளின் இடையில் வெளிச்சம் தென்பட்டால் லிஃப்ட் தளத்தில் உள்ளது என்று அர்த்தம் உதவிக்கு யாரேனும் அழைக்கலாம் மேலும் கதவுகளை தட்டி ஒலி எழுப்பலாம். தங்களால் வெளிச்சம் பார்க்க முடியவில்லை என்றால் இரண்டு தளத்திற்கு நடுவில் உள்ளது என்று அர்த்தம் நீங்கள் கத்தினால் கூட யாருக்கும் கேட்காது அப்போது தொடந்து அலாரமணி பட்டனை அழுத்த வேண்டும். சத்தம் கேட்டு உதவிக்கு ஆள் வருவார்கள். சத்தம் போட்டு உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
- குழந்தைகளை தனியாக லிஃப்டில் செல்ல அனுமதிக்காதீர்கள். லிஃப்ட் இயக்கவும் உள்ளே மாட்டிக்கொண்டால் எவ்வாறு பொறுமையாக இருக்க வேண்டும் என செல்லித் தாருங்கள். அத்துடன் ஆளில்லாத லிஃப்டுக்குள் பயணிக்க அனுமதிக்காதீர்கள். குழந்தைகளுக்கு எப்போதும் லிஃப்டுகளை பரிந்துரைக்காதீர்கள்.
- கட்டடத்தில் தீ பிடித்திருந்தால் லிஃப்டை பயன்படுத்தாதீர்கள்.
- கூட்டமாக இருக்கும் போது லிஃப்டை தேர்ந்தெடுக்காதீர்கள். லிஃப்ட்டின் கதவுகள் மூடும் போது கை, கால் அல்லது வேறு பொருட்கள் பயன்படுத்தி நிறுத்தக்கூடாது. தளத்தின் பட்டனை அழுத்திக் கொண்டே இருக்ககூடாது. கதவுகளின் இடையில் சிக்கும் விதத்தில் துணிகள் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.