Cryptocurrency Bitcoin: ஒரு லட்சம் டாலரைத் தொட்ட பிட்காயின்.. வரலாறு காணாத சாதனை..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் 1,00,000 அமெரிக்க டாலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.

BitCoin (Photo Credit: Pixabay)

டிசம்பர் 05, நியூயார்க் (Technology News): அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (US Presidential Election 2024) வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (நவம்பர் 05) அமெரிக்காவில் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் (Joe Biden), பல்வேறு காரணங்களால் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து, இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேநேரத்தில், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிட்டார்.

இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி முதல் டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவரது ஆட்சியில் அரசாங்கத்தின் நிர்வாக பொறுப்பை கவனிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதன்படி டொனால்ட் டிரம்ப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தை நடத்துவதற்கு பால் அட்கின்ஸ் என்பவரை பரிந்துரைப்பதாகக் கூறினார். World's Best Airlines: உலகின் சிறந்த விமான நிறுவனம் எது..? பட்டியலை வெளியிட்ட ஏர்ஹெல்ப்..!

டொனால்ட் டிரம்ப் தான் வெற்றி பெற்றால் அமெரிக்காவை கிரிப்டோன் நாடாக மாற்றுவேன் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பிட்காயின் மதிப்பு அவர் வெற்றி பெற்றதில் இருந்து உயர்ந்து கொண்டே உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (05-12-24) 1,00,000 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு பிட்காயினின் விலை ரூ.87 லட்சமாகும். பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்த பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்த முடியும்‌

குறிப்பு: பிட்காயின் வாங்குவது/விற்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம். முதலீடுகளில் முறைகேடுகளும் இருக்கலாம். முதல் உங்கள் பணம் என்பதால் முழு ரிஸ்கும் உங்கள் பொறுப்பே. கவனத்துடன் இருப்பது எப்போது சாலச்சிறந்தது.