Digi Yatra: இனி விமான நிலையத்தில் லைன்ல நிற்க வேணாம்.. டிஜியாத்ரா செயலி மூலமா ஈஸியா போகலாம்.!
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் விமான பயணிகளின் வசதிக்காக டிஜியாத்ரா எனும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
டிசம்பர் 26, சென்னை (Technology News): விமான பயணிகளின் வசதிக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ‘டிஜியாத்ரா’ (Digi Yatra App) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஹைதராபாத், கொல்கத்தா, விஜயவாடா, புனே, மும்பை, கொச்சி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கவுஹாத்தி விமான நிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
டிஜியாத்ரா செயலி:
பயணிகள் டிஜியாத்ரா செயலி பதிவிறக்கம் செய்து, ஆதார் உள்ளிட்ட தங்களின் பயண விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் விமான நிலைய நுழைவுவாயில் முதல் விமானம் ஏறும் பகுதி வரை வரிசையில் அதிக நேரம் காத்திருக்காமல் செல்ல முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் தனிநபர் மற்றும் உடைமை சோதனைகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடைமைகள் எதுவும் இல்லையெனில் நேராக உள்ளே செல்ல முடியும். இந்த திட்டத்தின் நோக்கமே வேகமாகவும், பேப்பர் பயன்பாடு இல்லாமலும் பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தி தருவதே ஆகும். Airtel Down: திடீரென முடங்கிய ஏர்டெல்.. அவதிக்குள்ளான வாடிக்கையாளர்கள்..!
‘டிஜியாத்ரா’ செயலியை பயன்படுத்தும் முறை:
- Play Store / App Store இல் செயலியை நிறுவவும். டிஜியாத்ரா செயலியை நிறுவியவுடன் OTP பெற, உங்கள் தொலைப்பேசி எண்ணை உள்ளீடு செய்யவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தவும்.
- உங்கள் அடையாளச் சான்றுகளை டிஜிலாக்கர் / ஆதார் மூலம் இணைக்கவும். OTP மூலம் உங்கள் ஆதாரை உறுதி செய்யவும்.
- செல்ஃபி எடுத்து அதனை செயலியில் பதிவேற்றவும். குறிப்பு: நீங்கள் பதிவேற்றிய செல்ஃபி தெளிவாக இருப்பதை உறுதி செய்யவும்.
- டிஜியாத்ரா செயலியில் உங்கள் போர்டிங் பாஸ் விவரங்களை உள்ளிட்டு, புறப்படும் நேரத்தில் விமான நிலையத்துடன் பகிர்ந்து கொள்ளவும். போர்டிங் பாஸ் தகவல்: உங்கள் போர்டிங் பாஸ், விமான டிக்கெட் மற்றும் ஆதார் ஆகியவற்றில் உள்ள பெயர் சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.