Airtel Logo (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 26, சென்னை (Technology News): ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்கள் தங்களது சிம் சரியாக வேலை செய்யவில்லை என காலை முதல் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பி வருகின்றனர். கால் செய்வது மற்றும் கால்களைப் பெறுவதில் பிரச்சினை இருப்பதாகவும் கூறுகின்றனர். 4ஜி சேவை, 2ஜி சேவை போல மிகவும் மெதுவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். PM KISAN: பிஎம் கிசான் திட்டம் என்றால் என்ன? தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

திடீரென முடங்கிய ஏர்டெல்:

இதனால் 3,000 பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 47% பயனர்கள் மொத்த சேவையை இழந்துள்ளனர். அதே நேரத்தில் 30% பேர் முழுமையான சமிக்ஞை பற்றாக்குறையுடன் போராடி வருகின்றனர். 23% பேர் மொபைல் ஃபோன் இணைப்பில் சிக்கல் பிரச்சனை இருப்பதாக அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிலர்க்கு ஏர்டெல் சிக்னல் முழுமையாக தடைபட்டதால், அவசரத் தேவைக்கு கூட அழைப்புகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டனர். இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.