IPL Auction 2025 Live

How to Block an ATM Card: உங்கள் ஏடிஎம் கார்டு காணாம போச்சா? அப்போ உடனே பிளாக் பண்ணுங்க..!

வங்கியின் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், அந்த கார்டை பிளாக் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் காணலாம்.

ATM file pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 29, சென்னை (Technology News): ஏடிஎம் கார்ட் (ATM Card) பற்றின விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது என அனைத்து வங்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஏனெனில் ஏடிஎம் கார்டில், தனிப்பட்ட மொத்தம் விவரமும், வங்கிக் கணக்கு விவரமும் உள்ளது. மேலும் இந்த கார்டுகள் மூலம், தனிப்பட்ட தகவல்களை எடுப்பதுடன், அக்கவுண்டை ஹேக் செய்து வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் தான், ஏடிஎம் கார்டுகள் தொலைந்து போனாலோ அல்லது திருடுபோனாலோ உடனடியாக பிளாக் செய்வது அவசியம். ஆனால் உங்கள் அனுமதியின்றி யாராலும் உங்கள் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்க முடியாது என்பதும் நினைவிருக்கட்டும். அனைத்து வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்ய ஒரே வழிமுறை தான்.

குறுஞ்செய்தி மூலம் பிளாக் செய்ய: தொலைந்த ஏடிஎம் கார்டை மொபைல் மூலம் மெசேஜ் அனுப்பி கார்டை பிளாக் செய்து கொள்ளலாம். வங்கி கணக்குடன் படி செய்திருக்கும் மொபைல் எண்ணிலிருந்து BLOCK CCCC AAAA என்ற மெசோஜ் அனுப்ப வேண்டும். (CCCC என்பது தொலைந்த ஏடிஎம் கார்டின் கடைசி 4 இலக்க எண்கள். AAAA என்பது வங்கி கணக்கு எண்.) இதை 567676 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மெசேஜ் அனுப்பிய பின், அந்த ஏடிஎம் கார்டுகள் பிளாக் ஆகிவிட்டது என குறுஞ்செய்தி தகவலுடன் வந்துவிடும். TV Screen Cleaning Tips: டிவி ஸ்க்ரீனை துடைக்கப் போறீங்களா? அப்போ இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

கால் மூலம் பிளாக் செய்ய: வங்கி கணக்குடன் வைக்கப்பட்டுள்ள எண்ணிலிருந்து கால் செய்தும் ஏடிஎம் கார்ட் பிளாக் செய்ய முடியும். 1800112 211 என்ற எண்ணிற்கு கால் செய்து அதை வழி முறைகளைப் பின்பற்றி BLOCK ATM CARD என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பின் தேர்வு செய்த வங்கியின் அதிகாரிக்கு கால் செல்லும். அவர்கலிடம் சில வங்கி கணக்கு போன்ற சில விவரங்களை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு கார்டை பிளாக் செய்து விடுவர். பின் பிளாக் செய்த விவரம் குறுஞ்செய்தியாக அனுப்படும்.

இவைகளைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதளத்திலும் அல்லது வாடிக்கையாளர் சேவைக்கு கால் செய்தும் பிளாக் செய்யலாம். அல்லது நேரடியாக வங்கிக் கிளைக்கு சென்று பிளாக் செய்தும் கொள்ளலாம்.