Laptop Buying Guide: லேப்டாப் வாங்க போறிங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்காம வாங்காதீங்க..!
எந்த லேப்லாட் வாங்க நினைத்தாலும் அதிலுள்ள முக்கிய அம்சங்களை கவனித்து வாங்க வேண்டும்.
டிசம்பர் 23, சென்னை (Technology News): கொரானாவிற்கு பிறகு தொலைபேசி, கணினிகளின் தேவைகள் அதிகமாகியுள்ளது. அதனால் இவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. உங்கள் பட்ஜெட்டுக்குள் அல்லது எந்த லேப்லாட் வாங்க நினைத்தாலும் அதிலுள்ள முக்கிய அம்சங்களை கவனித்து வாங்க வேண்டும்.
பட்ஜெட்:
லேப்டாப்களை முதலில் எந்த நோக்கத்திற்காக வாங்குகிறீர்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் தேவைகேற்ப லேப்டாப்களின் முக்கிய அம்சம் மற்றும் விலையையும் ஒப்பிட்டு வாங்கலாம். மேலும் தேர்வு செய்த லேப்டாப் உங்கல் பட்ஜெட்டிற்குள் வருகிறதா என்று பாருங்கள். ஏனெனில் அனைத்து விலையிலும் நல்ல லேப்டாப்கள் கிடைக்கின்றன. பட்ஜெட்டிற்கு மீறி செலவழிக்க வேண்டாம். மேலும் லேப்டாப் வாங்கும் போது அதன் வாரண்டி, கேரண்டி செக் செய்து வாங்கவும்.
டிஸ்பிளே:
உங்கள் தேவையைப் பொருத்தே லேப்டாப்களின் டிஸ்பிளே இன்ச் இருக்க வேண்டும். அனைத்து வேலைகளுக்கும் பொதுவாக 14 இன்ச் லேப்டாப்கள் பொருத்தமாக இருக்கும். எடிடிங், கேமிங், போன்ற பயன்பாட்டிற்காக லேப்டாப் வாங்குபவர்கள் 17 இன்ச் கச்சிதமாக இருக்கும். ஸ்கிரீன் கிளாசி அல்லது மாட் ஃபினிஸில் உங்கள் விருப்பத்தை பொருத்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். டிஸ்பிளே ஃபுல் ஹெச்டியாகத் தேர்வு செய்யவும். உங்கள் பட்ஜெட் ரூ.70,000-க்கும் மேல் என்றால், OLED டிஸ்ப்ளே கொண்டதை வாங்கலாம். Lava Launches Blaze Duo: லாவா பிளேஸ் டுயோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
OS:
எல்லா கணினிகளில் முக்கியமாக பார்க்க வேண்டியது ஓஸ் எனப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணினி மற்றும் மொபைல் இயங்குவதற்கு அடிப்படியான ஒன்றாகும். Windows, mac os, linux - ல் போன்ற ஓஸ்களில் லேப்டாப்கள் பயனாளர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றவை.
ப்ராசஸர் & பேட்டரி:
10th அல்லது 11th Gen intel Core i9 ப்ராசஸர் லேட்டஸ்ட்டானது என்றாலும் ஆஃபிஸ் வேலை அல்லது டைப்பிங் சார்ந்த லைட் வேலைகளுக்கு பொருத்தமாக இருக்கும். நீங்கள் கேமிங், எடிடிங், அதிக மென்பொருள் சார்ந்த வேலைகள் இருக்கும் என்றால் குறைந்தபட்சம் Intel Core i5/AMD Ryzen 5 ப்ராசஸரை கொண்ட ஒரு லேப் வாங்க வேண்டும். Core i5 ப்ராசஸர் ஒரு ஹெவி ஒர்க் செய்ய ஏதுவாக இருக்கும். புதிதாக பல ப்ராசஸ்ர்கள் சந்தையில் வந்துள்ளன. மேலும் ப்ராஸசர் வேகமாக இருப்பின் கட்டாயம் அதன் பேட்டரி லைஃப் குறையும். சில நிறுவனங்கள் மட்டும் ப்ராஸசர் மற்றும் பேட்டரி சிறப்பாக செயல்படும் விதத்தில் இருக்கின்றனர்.
RAM:
நீங்கள் வாங்கும் லேப்டாப்கள் குறைந்தபடசம் 8 GB க்கு மேல் இருக்கும் RAM மாடல்களைத் தேர்வு செய்ய வேண்டும். இது ஒரே நேரத்தில் பல பயன்பாட்டு மெமரிகளை சேகரித்து வைத்து இடையூரற்ற சேவையை வழங்கும். 4 GB RAM கொண்டவற்றில் அதிக செயல்திறன் இருக்காது. ஹேவி யூஸ் செய்பவர்கள் 16GB RAM மேல் வாங்குவது சிறந்தது. ஆனால் RAM அடிப்படையில் லேப்டாப் தேர்ந்தெடுப்பதை விட ப்ராசஸ்ரில் அதிக கவனம் செலுத்த வேண்டும். RAM தேர்வு செய்கையில் கிராஃபிக்ஸ் கார்டின் அளவை தெரிந்து கொண்டு தேர்வு செய்யுங்கள்.
ஸ்டோரேஜ்:
தற்போது டிரெண்டிங்கிங்கில் இருக்கும் SSD விலை அதிகமான லேப்களில் கிடைக்கிறது. இது வேகமான செயல்திறனைக் கொண்டுள்ளது. மலிமாக வாங்க வேண்டுமெனில் HDD சிறந்த தேர்வாக இருக்கும். விலை குறைந்த ஸ்டோரேஜில் இது அதிவேக செயல் திறனைக் கொண்டுள்ளது.
எடை:
ஒரே இடத்தில் வைத்து வேலை செய்வது போன்ற லேப்டாப்கள் 2 கிலோவாக இருந்தாலும் பிரச்சனையில்லை ஆனால் அடிக்கடி வெளியில் எடுத்து செல்லும் தேவை இருப்பின் 1.5 கிலோ எடை இருக்குமாறு வாங்குவது நல்லது.