Lava (Photo Credit: @OneilyGadget X)

டிசம்பர் 20, சென்னை (Technology News): இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது லாவா இண்டர்நேஷனல். இந்த நிறுவனம் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றைஉற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் டுயோ 5ஜி போன் (Lava Blaze Duo 5G) அறிமுகமாகி உள்ளது. Personal Accident Insurance: ₹396 செலுத்தினால் ₹10 லட்சம்.. ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு.. விபரம் உள்ளே..!

சிறப்பம்சங்கள்:

லாவா பிளேஸ் டுயோ 5ஜி போனில் 6.67 இன்ச் பிரதான டிஸ்பிளே, மீடியாடெக் டிமான்சிட்டி 7025 சிப்செட் வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் மேற்கொள்ளலாம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இது 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா, 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா, 5000mAh பேட்டரி, 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட், டைப்-சி யுஎஸ்பி போர்ட் உடன் வழங்குகிறது. இந்த போனின் விலை ரூ.16,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.