Protect Your Computer & Mobile During Summer: WFH முறையில் கணினியில் வேலையா? ஸ்மார்ட் பொருட்களை கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாப்பது எப்படி?.!

ஏனெனில் வெயிலின் காரணமாக அவை தீப்பற்றிக் கூட எரியலாம். எனவே கோடை காலத்தில் மின்சாதனங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பதனைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

Laptop (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 15, சென்னை (Technolgy News): தற்போது பலர் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகின்றோம். அதற்காக நாள் முழுவதும் கணினி, டேப்லெட், ஐபேட் (Computer, Tablet, iPad) என பல மின் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றோம். நாம் தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால் இவைகள் அக்னி குழம்புகள் போன்று கொதிக்கின்றன. அதுவும் இந்த கோடை காலத்தில் பயங்கரமாக மின்சாதனங்கள் சூடேறும். அதனை எவ்வாறு பாதுகாப்பது என்று இப்பதிவில் காணலாம்.

மின் சாதனங்களை பாதுகாக்கும் முறைகள்: பலர் வீட்டில் பணிபுரியும் போது ஜன்னல் அருகே அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் சூரிய ஒளி நேரடியாக வீட்டிற்குள் வரும். அவை நேரடியாக உங்களது மின் சாதனங்கள் மீதும் படும். எனவே மின்சாதனங்கள் சூடு ஏறுவதற்கான முக்கிய காரணமாக இது பார்க்கப்படுகிறது. எனவே எப்போதும் ஜன்னலை விட்டு தள்ளி இருக்கக்கூடிய பகுதிகளிலேயே மின்சாதனங்களை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஏசி இருக்க கூடிய அல்லது குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்து மின் சாதனங்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதன் மூலம் அவை சூடு ஏறுவதை தடுக்கலாம். Mushroom Masala Recipe: கார சாரமான காளான் மசாலா கிரேவி.. சுலபமாக செய்வது எப்படி?.!

அதுமட்டுமின்றி கணினிகளில் அதிக டேப் மற்றும் சாப்ட்வேர்களை திறந்து வைப்பது, டேப்லட் மற்றும் ஐபேட்களில் அதிக ஆப்களை திறந்து வைப்பது, ஆகியவை மின் சாதனங்கள் சூடு ஏறுவதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. எனவே அவற்றினை நாம் தவிர்க்க வேண்டும். கணினிகள் மற்றும் லேப்டாப்புகளை பயன்படுத்தும் போது அவற்றின் வென்ட்கள் மற்றும் மின்விசிறிகளை நாம் சுத்தம் செய்ய வேண்டும். அங்கு தூசிகள் அடைப்பதனால் கூட கணினி சூடு ஏறலாம்.