IRCTC Website Down: திடீரென காலையில் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தற்போதைய நிலவரம் என்ன?!
IRCTC இணையதளம் இன்று காலையில் முடங்கியது.
டிசம்பர் 09, டெல்லி (Technology News): மத்திய இரயில்வே அமைச்சகம் தனது பயனர்கள், பயணச்சீட்டை முன்பதிவு செய்ய ஏதுவாக IRCTC செயலியை உருவாக்கி இருக்கிறது. இந்த செயலியின் வாயிலாக இந்திய இரயில்வே பயணசீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான பயனர்கள் நேரடியாக IRCTC செயலியின் மூலமாக தங்களின் பயணசீட்டுகளை பயண நேரங்களில் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில், இன்று பயனர்கள் IRCTC செயலி மற்றும் இணையப்பக்கத்தின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது இன்று காலையில் பராமரிப்பு பணி காரணமாக இணையதளம் முடங்கி இருந்தது. Mobile Explosion: சட்டைப்பையில் இருந்த ஸ்மார்ட்போன் வெடித்து ஆசிரியர் பரிதாப பலி., இருசக்கர வாகன பயணத்தில் சோகம்.!
இந்த தகவலை உறுதி செய்துள்ள IRCTC நிர்வாகம், தனது எக்ஸ் பக்கத்தில் சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. பொதுவாக இணையதளத்தின் பராமரிப்பு பணிகள் இரவு 11 மணிக்கு மேல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இணையதளம் மற்றும் செயலியின் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதே நேரத்தில், இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அதாவது டிசம்பர் 10 ஆம் தேதி வரை ஐஆர்சிடிசியில் புதிய பதிவு, உள்நுழைவு கடவுச்சொல் மற்றும் சுயவிவர கடவுச்சொல்லை புதுப்பித்தல் சாத்தியமில்லை என்று ஐஆர்சிடிசி இணையதளத்தில் தெரிவித்துள்ளது.