டிசம்பர் 08, கோண்டியா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோண்டியா மாவட்டம், சிரேகான் சங்கதி பகுதியை பூர்வீகமாக கொண்டவர் சுரேஷ் பிகாஜி சங்கரமே. இவர் கத்சிரோலி மாவட்டத்தில் உள்ள சமர்தி, தேசிகஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனது உறவினர் நாது கைக்வாட் என்பவருடன் அங்குள்ள மார்க்கெட் பகுதிக்குச் சென்று, வீட்டிற்கு தேவையான மளிகை, காய்-கறிகளை வாங்கி இருக்கின்றனர்.
திடீரென வெடித்து சிதறியது:
பின் இருவரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தபோது, சுரேஷ் தனது சட்டைப்பையில் செல்போனை வைத்துள்ளார். இவர்கள் சிரேகான் - சங்கதி பகுதியில் உள்ள கேஸலவாடா பாடா பகுதியில் வந்துள்ளனர். அச்சமயம், சுரேஷின் சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறி இருக்கிறது. இருவரும் வாகனத்தில் வரும்போது இந்த சம்பவம் நடைபெற்றதால், செல்போன் வெடித்த சில நொடிகளில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். WhatsApp New Update: டைப்பிங் இண்டிகேட்டரை அறிமுகம் செய்த வாட்சப்; நீங்க இதை கவனிசீன்களா? புதிய அப்டேட் இதோ.!
ஒருவர் பலி., மற்றொருவர் காயம்:
வாகனம் சாலையில் விபத்திற்குள்ளானதில், நாது கைக்வாட் படுகாயமடைந்து இருந்தார். விபத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயத்துடன் இருந்த நாதுவும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
காவல்துறை விசாரணை:
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மொபைல் போன் பாகமும் சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேல் சட்டை பாக்கெட்டில் செல்போன் இருந்த நிலையில், திடீரென வெடித்துச் சிதறியதால் சுரேஷ் உயிரிழந்துபோனார். இந்த சம்பவத்தால் சுரேஷின் குடும்பத்தினர் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.