Poco M6 4G: 108MP முதன்மை கேமராவுடன் புதிய போக்கோ M6 4G ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

போக்கோ M6 4G ஸ்மார்ட் போன், ஜூன் 11-ஆம் தேதி அன்று பட்ஜெட் விலையில், உலகளவில் அறிமுகமாக உள்ளது.

Poco M6 4G (Photo Credit: @x_newstech X)

ஜூன் 10, சென்னை (Technology News): போக்கோ நிறுவனம் தனது M-சீரிஸில் மலிவான 4G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்தில், ஜூன் 11-ஆம் தேதி அன்று உலக சந்தையில் போக்கோ M6 4G (Poco M6 4G Smart Phone) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யப்படவுள்ளது.  இதன் முழு விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இரண்டு வகைகளின் விலைகளை உறுதிப்படுத்தும் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளது. Vendakkai Benefits: வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பயன்கள்..!

விலை:

இது 6GB ரேம் 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் 256GB ஸ்டோரேஜ் ஆகிய இரு வகைகளில் உள்ளது.

போனின் 6GB ரேம் வேரியண்ட் $129, இந்திய மதிப்பில் ரூ. 10,700 மற்றும் 8GB ரேம் வேரியண்ட் $149, தோராயமாக ரூ. 12,400 ஆகும்.

இந்த ஸ்மார்ட் போன் கருப்பு, வெள்ளி மற்றும் ஊதா நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் மூலம் இயங்குகின்றது. 6.79-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே பேனலைக் கொண்டுள்ளது. இது FullHD பிளஸ் தெளிவுத்திறனுடன் வருகின்றது. 20.5:9 விகிதத்தையும் 550 நிட்கள் வரை பிரகாசத்தையும் கொண்டுள்ளது.

மொபைலின் பின்புறத்தில் 108MP முதன்மை கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் f/2.45 அப்பசர் கொண்ட 13MP செல்பி கேமரா ஆகும்.

இந்த ஸ்மார்ட் போனில் Helio G91 Ultra சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

இதில் 5,030mAh பேட்டரி திறனுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படுகின்றது. இந்த போனில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.

இது இரட்டை சிம், 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.4, NFC மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், USB-C ஆகியவற்றின் இணைப்பு வசதிகளை கொண்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now