ஜூன் 10, சென்னை (Health Tips): நமது அன்றாட உணவில் சத்து நிறைந்த காய்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்கக்கூடிய காய் வகைகள் நிறைய இருக்கின்றன. தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில், நாம் வெண்டைக்காய் (Ladies Finger) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம்.

ஞாபகசக்தி: மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், வாரத்திற்கு நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவது நல்ல பயனை அளிக்கும். இது ஞாபக சக்தியை பெற உதவுகிறது.

மூளை: வெண்டைக்காய் (Vendakkai) சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் இதனை பெரும்பாலும் அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். Electrician Death: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி; மின்கம்பத்தில் 4 மணிநேரம் தொங்கிய உடல்..!

புற்று நோய்: நமது உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இந்த செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய் கொண்டுள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி: வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சரியான விகிதத்தில் சாப்பிடுவது, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கல்லீரல்: தினமும் உணவில் வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சம்மந்தமான பிரச்சனைகள் சரியாகும்.

கொலஸ்ட்ரால்: வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது. எனவே, உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காய், உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க உதவுகிறது.

உடல் எடை: வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும். வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். மேலும், உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும்.