Repo Rate: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு! ரெப்போ வட்டி என்றால் என்ன தெரியுமா? கண்டிப்பாக தெரிஞ்சிக்க வேண்டிய விசயம்..!
ரெப்போ வட்டி விகித்தில் மாற்றமில்லை, 6.5 சதவீதம் ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 10, சென்னை (Technology News): ரிசர்வ் வங்கியின் Monetary policy committee என்ற அமைப்பானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரெப்போ வட்டி விகிதத்தையும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயிப்பர். இது பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. 2023 பட்ஜெட்டிற்கு பிறகு பிப்ரவரி 7 அன்று 25 புள்ளிகள் ஏற்றி 6.5 % ஆக நிர்ணயித்தது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த வாரம் அறிவித்துள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate):
ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கும் கடன்களுக்கான வட்டிவிகிதம் தான். தற்போது இந்திய பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தில் உள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாகவும், பணவீக்க விகிதம் 5.2 ஆகவும் இருக்கிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்தால் ரெப்போ விகிதமும் அதிகரிக்கும். ரெப்போ ரேட் அதிகரித்தால் வங்கிகள் கட்டும் வட்டித் தொகையும் அதிகரிக்கும். அது போன்ற நேரங்களில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற மாட்டார்கள் அல்லது இந்த வட்டியை சமாளிக்க மக்களுக்கு தரும் கடனின் வட்டி விகிதத்தை உயர்த்துவர். இதனால் மக்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும். மீண்டும் பணவீக்கம் குறைவாக மாறும் போது இந்த ரெப்போ ரேட்டும் குறைந்துவிடும். இதனால் மக்களுக்கு கொடுக்கப்படும் வட்டியும் குறைவாக மாறிவிடும். YesMadam Layoffs: "உங்களுக்கு மன அழுத்தமா..?" சர்வே நடத்தி பணிநீக்கம் செய்த யெஸ்மேடம் நிறுவனம்..!
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் (Reverse ):
வங்கிகள், ஆர்.பி.ஐ-யிடம் பணத்தை டெபாசிட் செய்து வைப்பர். அதற்கு ஆர்.பி.ஐ வங்கிகளுக்கு வட்டிகள் வழங்கும் சதவீதம் தான் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம். ரிவர்ஸ் ரெப்போ ரேட் அதிகரித்திருந்தால் வங்கிகளுக்கு வரும் டெபாசிட் வட்டி தொகை அதிகரிக்கும். இதனால் வங்கிகள் மக்களிடம் கடனாக பணத்தை தருவதை விட, ஆர்.பி.ஐ-யில் டெபாசிட் செய்டு வைப்பதையே செய்வர். ஆனால் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வங்கிகளுக்கு குறைவான வட்டியே கிடைக்கும். இதனால் வங்கிகள் மக்களுக்கு கடனாக கொடுத்து வட்டிகள் பெற்றுக்கொள்ளும்.
சந்தையில் இதன் பங்கு:
இந்த ரெப்போ ரேட்களை அதிகரிக்கும் போது, நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன்கள் வாங்காது. இதனால் உற்பத்திக் குறையும் வருமானம் பாதிக்கும். ரெப்போ ரேட்கள் குறைந்தால் நிறுவனங்கள் கடன்கள் அதிகம் வாங்கி உற்பத்தியை அதிகரிக்கும். பங்கு சந்தையில் அந்த நிறுவனங்களின் மதிப்பும் உயரும்.