Tech Tips in Tamil: செல்போன் பேட்டரி நீடித்து இருக்க வேண்டுமா? அப்போ இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!

செல்போனில் பேட்டரி செயல்திறன் அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய குறிப்புகளை இப்பதிவில் காண்போம்.

Battery Charging (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 15, சென்னை (Technology News): நம் வாழ்க்கையில் இன்றியமையாத பொருட்களில் ஓன்றாக ஸ்மார்ட்போன் இருக்கிறது. காலை எழுந்து கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படும் அத்தியாவசிய பொருளாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், ஸ்மார்ட்போன் அனைவரும் பயன்படுத்தக்கூடியா ஒன்றாக உள்ளது. இந்நிலையில், அந்த ஸ்மார்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல், சீக்கிரம் காலியாவதால், பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. போனின் பேட்டரி அதிக நேரம் நீடிக்க சில தவறுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். அந்தவகையில், ஸ்மார்போன் பேட்டரி (Battery Performance) அதிக நேரம் நீடித்து இருக்க நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்களை இப்பதிவில் பார்ப்போம். Meta Layoffs: 3,600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய முடிவு.. மெட்டா நிறுவனம் அதிரடி..!

100% பேட்டரி சார்ஜ் (Fully Charged):

செல்போனை 100% வரை சார்ஜ் செய்யக்கூடாது. பேட்டரி 85% முதல் 90% வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும் என எச்சரிக்கின்றனர். 100% பேட்டரி சார்ஜ் செய்வது பேட்டரி செல்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் செயல்திறனை பாதிக்கிறது.

நீண்ட நேரம் சார்ஜ் செய்வது (Long Charging Time):

பலர் தூங்கும் முன் போனை சார்ஜில் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இரவு முழுவதும் சார்ஜ் செய்வது பேட்டரியில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, பேட்டரி செயல்திறனை பெரிதும் பாதிக்கிறது.

அதிகளவில் திரை பிரகாசம் (Screen Brightness):

செல்போன் திரையின் பிரகாசத்தை அதிகளவில் வைப்பது பேட்டரியை சீக்கிரம் காலி செய்வதோடு மட்டுமல்லாமல், கண்தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தையம் அதிகரிக்கிறது.

பின்னணியில் இயங்கும் செயலிகள் (Background Apps):

நாம் பயன்படுத்தும் பல செயலிகள் பின்னணியில் இயங்குவதை முதலில் நிறுத்த வேண்டும். இந்த செயலிகள் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், பின்னணியில் இயங்குவது பேட்டரி உபயோகத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்கிறது.

புளூடூத் மற்றும் வைஃபை முடக்கம் (Bluetooth & Wi-Fi):

புளூடூத் மற்றும் வைஃபை பயன்படுத்தாதபோது, ​​அவற்றை ஆஃப் செய்யவும். இல்லையெனில், பேட்டரி சீக்கிரம் காலியாகிவிடும்.

பிற சார்ஜர்கள் பயன்படுத்துதல் (Duplicate Charger):

பேட்டரி செயல்திறனை அதிகரிக்க, நிறுவனம் வழங்கும் அசல் சார்ஜரை பயன்படுத்தவும். டூப்ளிகேட் சார்ஜர்கள் பேட்டரியை சேதப்படுத்தி அதன் செயல்திறனை பாதிக்கும்.

அதிக வெப்பம் (Heat Issue):

செல்போனை எப்போதும் நேரடி சூரிய ஒளியில் அல்லது சூடான இடத்தில் வைப்பது பேட்டரியை சேதப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. எனவே, இதனை தவிர்ப்பது நல்லது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now