Meta (Photo Credit: @TheSouthfirst X)

பிப்ரவரி 14, சான் பிரான்சிஸ்கோ (Technology News): உலகம் முழுவதும் நாளுக்குநாள் பணிநீக்கங்கள் (Layoffs) அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ஏஐ தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) வளர்ச்சி காரணமாக பணிநீக்கங்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, உலகளவில் சுமார் 3,600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது, அதன் பணியாளர்களில் சுமார் 5 சதவீதம் பேரை பாதிக்கிறது. Business Ideas: வேலை இல்லையா கவலை வேண்டாம்.. குறைந்த செலவில் தொழில் தொடங்கலாம்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

மின்னஞ்சல் மூலம் பணிநீக்கம்:

மெட்டா நிறுவனம் (Meta), பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 3,600 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான தகவல் அனுப்பிவைக்கப்பட்டு, ஆக்ஸஸ் அட்டை (Access Card) செயல்படாத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஐரோப்பா, ஆசிய பசிபிக், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை வெகுவாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடரும் பணிநீக்கங்கள்:

இந்த பணிநீக்க நடவடிக்கையானது, பிப்ரவரி 11 முதல் 18 ஆகிய தேதிகள் வரை நடைபெறும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், தற்போதைக்கு நிறுவனத்துக்குள் வேறு பணிகளுக்கு இடமாற்றம் கோர முடியாது என்றும், அவர்களது பணிநீக்க இறுதி தேதிக்குப் பிறகு, இதே நிறுவனத்தில் வேறு ஏதேனும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மெட்டாவைத் தவிர, இந்த ஆண்டு கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்களும் ஏற்கனவே பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்களின் வரவிருக்கும் பணிநீக்கங்கள், செயல்திறனில் அதிக கவனம் செலுத்தும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.