Vivo X200 Series: அசத்தலான சிறப்பம்சங்களுடன் விவோ எக்ஸ்200 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
இந்தியாவில் விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அசத்தலான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 14, சென்னை (Technology News): விவோ நிறுவனம் விவோ எக்ஸ்200 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில், விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro)ஆகிய மாடல்கள் அடங்கும். கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்100 போனை விவோ அறிமுகம் செய்திருந்தது. அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக எக்ஸ்200 சீரிஸ் வெளிவந்துள்ளது. இது விவோவின் ஃப்ளக்-ஷிப் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் 200MP ZEISS APO Telephoto Camera ஆக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
விவோ எக்ஸ்200 விலை:
- இந்தியாவில் விவோ எக்ஸ்200 விலை 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகத்திற்கு ரூ.71,999 ஆகவும், இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்தின் விலை ரூ.65,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விவோ எக்ஸ்200 ப்ரோவின் விலை ரூ.94,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த விலையில், 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகத்தில் கிடைக்கும். Social Media Marketing: தொழில் தொடங்க போறீங்களா? அத இன்ஸ்டா, ஃபேஸ்புக்னு பிரபலமாக்கனுமா? உங்களுக்கான டிப்ஸ் இதோ.!
சிறப்பம்சங்கள்:
விவோ எக்ஸ்200 சீரிஸின் இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான Fun touch OS 15-யில் இயங்குகின்றன. இதில், 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு சாப்ட்வேர் அப்டேட்களை வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டைமன்சிட்டி 9400 சிப்செட் உள்ளது.
விவோ எக்ஸ்200 ப்ரோ:
- இது 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.78-இன்ச், LTPO AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இதில், HDR10+ மற்றும் Dolby Vision சப்போர்டையும் 4500 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் வழங்குகிறது.
- இந்த ஸ்மார்ட்போனில், 50MP ப்ரைமரி கேமரா, 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட Zeiss-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் கேமரா உள்ளது.
- போனின் முன்பக்கத்தில் 32MP செல்பி ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியைப் பற்றி பேசுகையில், X200 ப்ரோ 90வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன், 6000mAh பேட்டரி மற்றும் 30வாட் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டை கொண்டுள்ளது.
விவோ எக்ஸ்200:
- விவோ எக்ஸ்200, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்கான IP69 ரேட்டிங்குடன் வருகிறது. டிஸ்ப்ளே பொறுத்தவரை, இதில் 6.67-இன்ச் AMOLED ஸ்க்ரீனை 120Hz ரெப்ராஸ் ரேட், HDR10+ சப்போர்ட் மற்றும் 4500 nits ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- இது ஜெய்ஸ்-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 50MP ப்ரைம் கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- முன்பக்கத்தில் 32எம்பி செல்பி ஷூட்டரும் உள்ளது. இந்த போனில் 90வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன், 5800mAh பேட்டரியை வழங்குகிறது.