டிசம்பர் 13, சென்னை (Technology News): முன்பெல்லாம் விளம்பரம் செய்ய தெரியாமல் சொந்தமாக தொழில் தொடங்குவது கடினம் என்பதாலே சுயதொழில் செய்வது குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான தொழில் முனைவோருக்கு பக்க பலமாக இருப்பது இந்த சமூக ஊடகம். எவ்வளவு முடியுமே அந்த அளவிற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யலாம். இருப்பினும் சமூக ஊடகங்களை கையாள்வது என்பது எளிதானதல்ல.
பிசினஸ் அகவுண்டுகள்:
எப்போதும் சமூக வலைதளங்களில் பிசினஸ் அகவுண்டுகள் ஆக்டிவாக இருக்க வேண்டும். அதாவது பிசினஸ்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம், சமூக ஊடகம் (இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப்), ப்ளாக் (blog) போன்ற விளம்பரப்படுத்தும் அனைத்து அகவுண்ட்களும் எப்போதும் ஏதாவது பதிவுகளையும், உங்கள் பொருட்கள் பற்றிய விவரங்களையும் பதிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் பிராண்டுகள் மக்களிடையே அல்லது உங்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு நினைவில் இருக்கும். அதற்காக ஒரே நாளில் அதிக போஸ்டுகளை போட்டு கொண்டே இருக்கக்கூடாது. அது மக்களை சில நேரம் எரிச்சலடைய வைத்து அன்ஃபாலோ செய்ய வழிவகுத்துவிடும். Face Massage Machine: தினமும் முகத்திற்கு மசாஜ் செய்ய போறீங்களா? அப்போ இந்த கருவிகளை வாங்கிக்கோங்க..!
மக்களுடன் தொடர்பு:
மக்களுடன் அதிகமாக இண்டராக்ட் செய்யவது மிக முக்கியமானது. சமூக வலைதளங்களில் மக்களின் கேட்கும் சந்தேகங்கள், கேள்விகள், உங்கள் பொருட்களை வாங்கியப் பின் அவர்கள் சொல்லும் கருத்துக்களும் விமர்சனங்களும் தான், உங்கள் பொருட்களை வாங்க வரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இதுவே நம்பிக்கை அளிக்கிறது. அதனால் சமூக வலைதளங்களில் மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவது மிக அவசியம். மேலும் தற்போது மக்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். எந்த வீடியோக்கள், பாடல்கள் அதிகமாக கவரப்படுகிறது என்று நோட் செய்து அதைப் போல் தங்களின் புராடெக்டை விளம்பரப்படுத்தலாம். உதாரணமாக தற்போது ‘லியோ’ படத்தின் டைட்டில் டிரைலர் போல உங்கள் புராடெக்டை வீடியோவாக எடுத்து வெளியிடலாம். அல்லது கேக் சாக்லேட், கலை போன்ற தொழில் செய்பவர்கள் லியோ விஜயின் வடிவம் இருப்பது போன்ற புராடெக்டை செய்து சமூக வலைதளத்தில் பதிவிடலாம். மீம்ஸ்கள் செய்து கூட உங்கள் பிராண்டை பிரபலப்படுத்தலாம்.
உண்மைத் தன்மை:
மேலும் உங்கள் பொருட்களிலும் பதிவுகளிலும் உண்மைத்தன்மை இருக்க வேண்டும். பதிவிடும் பதிவுகளும் கருத்துகள், விலைகள் உண்மையானதாக இருக்க வேண்டும். சமூக ஊடகத்தில் ஒரு விலையும் ஆர்டர் செய்யும் போது ஒரு விலையும் இருக்க கூடாது. மேலும் உடையாத பொருட்களாக அனுப்ப வேண்டும். அப்போது தான் மக்கள் அடுத்த முறையும் உங்கள் பொருட்களையே தேர்ந்தெடுத்து வாங்குவர். விளம்பரப்படுத்தும் விதத்தில் தான் மக்கள் பொருட்களை ஆர்வமுடன் வாங்குவார்கள். விழா நாட்களில் வாழ்த்துச் செய்தியுடன் கஸ்டமரின் தொலை பேசி எண்கள் அல்லது இமெயில் உங்கள் பிராண்டை அனுப்பி விளம்பரப்படுத்தலாம்.