Vivo X Fold 3 Pro: இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ..! முழு விவரம் இதோ..!

சீன நிறுவனமான விவோ தனது புதிய மடித்து வைக்கக்கூடிய ஸ்மார்ட் போனை அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது.

Vivo X Fold 3 Pro (Photo Credit: @91mobiles X)

மே 11, சென்னை (Technology News): விவோ நிறுவனம் (Vivo Brand) அதன் புதிய ஸ்மார்ட் போனை கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது, விவோ மடிக்கக்கூடிய தனது ஸ்மார்ட் போனை இந்தியாவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதுகுறித்த தேதி விவரங்கள் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அடுத்த மாதம் (ஜூன்) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Mother In Law Murder: குடும்ப தகராறில் மாமியார் மருமகனால் வெட்டிக்கொலை; திண்டுக்கலில் பதற வைக்கும் சம்பவம்..!

சிறப்பம்சங்கள்: விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ, ஆண்ட்ராய்டு 14 உடன் இயங்கும் OriginOS 4 உடன் அறிமுகமானது. இதில், Qualcomm's Snapdragon 8 Gen 3 SoC இயங்குகிறது. மேலும், 120Hz Refresh Rate உடன் 8.03-இன்ச் AMOLED உள் திரையை கொண்டுள்ளது. Zeiss-பிராண்டட் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன், 16GB RAM மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், விவோவின் மடக்கக்கூடிய போனாக இது உள்ளது.

இது விவோ V3 இமேஜிங் சிப் மற்றும் கார்பன் ஃபைபர் கீல் உடன், இது TUV ரைன்லேண்டால் 5,00,000 மடிப்புகளைத் தாங்கும் தன்மை கொண்டது. இவை, இதில் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், இதில் 50MP பிரதான கேமராவை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா மற்றும் வெளிப்புற மற்றும் உள் திரைகள் என இரண்டும் 32MP செல்பி ஷூட்டர்கள் ஆகிய அம்சங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IPX8 மதிப்பீட்டு சான்றிதழை பெற்றுள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் 1.17 லட்சம் முதல் 1.5 லட்சம் என்ற அடிப்படையில் விற்பனைக்கு வரலாம்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement