மே 11, பழனி (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சித்ரா (வயது 45) என்பவரது மகள் நிவேதா (வயது 25). நிவேதாவுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலைச் சேர்ந்த ஜெயபால் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். நிவேதா, கலிக்கநாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். Mango Benefits: கோடைகாலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
அரிவாள் வெட்டு: இதனால், ஜெயபால் அடிக்கடி கலிக்கநாயக்கன்பட்டிக்கு சென்று தனது மனைவி மற்றும் மாமியாருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக, நிவேதா பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், மகளிர் காவல்துறையினர் ஜெயபாலை கண்டித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஜெயபால் மாமியார் வீட்டுக்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாமியார் சித்ராவை சரமாரியாக வெட்டி படுகொலை (Mother In Law Murder By Son In Law) செய்துள்ளார். இதனை தடுக்க வந்த மனைவி நிவேதாவின் கையை வெட்டிவிட்டு, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த நிவேதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர், படுகொலை செய்யப்பட்ட சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெயபாலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.