Vivo V29 & V29 Pro in India: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது Vivo V29 & V29 Pro ஸ்மார்ட்போன்: வாங்குவது எப்படி?.. விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!
விவோ வி29 ஸ்மார்ட்போனில் கேமராவை ஆன் செய்ததும் 2X லென்ஸ் திறனுடன் படம்பிடிக்கும். 90 டிகிரி கோணத்தில் படப்பிடிப்பு செய்யலாம். 8GB RAM, 256 GB Internal Storage வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 04, மும்பை (Technology News): விவோ (Vivo) நிறுவனத்தின் வ29 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் V29 ஸ்மார்ட்போன் கேமரா, புகைப்படங்களை பார்க்கும் போது கூடுதல் ஒளித்திரை மதிப்பு (Aura Brightness) உட்பட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
போட்டோ, வீடியோ எடுக்க செல்பி மற்றும் முன்பக்க கேமிரா இரண்டுமே 50MP அளவில் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 12MP கேமிராவும் உள்ளது. அதேபோல, 2 நானோ சிம்கார்டுகளை பொருத்திக்கொள்ளலாம். 188 கிராம் எடையுடன், 2800 X 1260 பிக்சல் AMOLED டிஸ்பிளெவுடன் ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது.
கேமராவை ஆன் செய்ததும் 2X லென்ஸ் திறனுடன் படம்பிடிக்கும். 90 டிகிரி கோணத்தில் படப்பிடிப்பு செய்யலாம். 8GB RAM, 256 GB Internal Storage வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 6.78 இன்ச் டிஸ்பிளே, FunTouch OS 13, ஆண்ட்ராய்டு 13 அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. Cloud Burst Wreak Havoc: மேகவெடிப்பு மழை காரணமாக சிக்கிமை புரட்டியெடுத்த வெள்ளம்: அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
இமயமலையின் நீலம், விண்வெளி கருப்பு நிறத்தில் Vivo V29 Smartphone விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதனைதவிர்த்து 4,600 mAh பேட்டரி திறன், 80W Flash Charger வழங்கப்படுகிறது. இதனால் 18 நிமிடத்தில் 1% சார்ஜ் முதல் 50% சார்ஜ் ஏறிவிடும்.
8GB+128GB ஸ்மார்ட்போன் ரூ.32,999 க்கும், 12GB+128GB ஸ்மார்ட்போன் ரூ.36,999 க்கும், 8GB+256GB ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கும், 12GB+256GB ஸ்மார்ட்போன் ரூ.42,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vivo V29 விற்பனை தொடங்கினாலும், V29 Pro ஸ்மார்ட்போன் 10 அக். 2023 முதல் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். Vivo V29 மாடல் ஸ்மார்ட்போன் 17 அக்.2023 முதல் விவோ வெப்சைட்டில் விற்பனைக்கு வரும். இதனை அன்றைய தினத்தில் இருந்து பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ டிஜிட்டல் லைப், பூர்விகா, சங்கீதா, பஜாஜ் எலக்ட்ரிக்கல் உட்பட பல ரீடைலர் ஷோ ரூம்களிலும் வாங்கலாம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)