Redmi 13 5G: 108MP கேமரா வசதியுடன் பட்ஜெட் விலையில் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்..! முழு விவரம் உள்ளே..!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
ஜூலை 12, சென்னை (Technology News): சியோமி நிறுவனம் தனது 10-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, மலிவு விலையிலும் பல சிறப்பம்சங்களுடனும் ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G Smart Phone) ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று (ஜூலை 12) மதியம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விலை:
6GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட் போன் ரூ. 12,999 விலையில் கிடைக்கும். (தோராயமாக $158 USD)
8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் ரூ. 14,499 (தோராயமாக $175 USD) விலையில் விற்பனைக்கு உள்ளது. Muttai Thokku Recipe: எப்போதும் ஒரே மாதிரியான முட்டை தொக்கு செய்றீங்களா? வித்தியாசமாக ட்ரை பண்ணி அசத்துங்கள்.. விபரம் உள்ளே.!
சிறப்பம்சங்கள்:
இதில், 6.79 இன்ச் ஃபுல் எச்டி+ LCD திரை மற்றும் 120Hz adaptive ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது. இந்த போனின் மையப்பகுதியில் பஞ்ச் ஹோல் கேமரா டிசைன், பின்புறத்தில் ஸ்டைலான கிறிஸ்டல் கண்ணாடியுடன் உள்ளது.
இந்த போன் புதிய ஆண்ட்ராய்டு 14 உடன் Xiaomi's Hyper OS-யில் இயங்குகிறது. மேலும், இதில் Corning Gorilla Glass 3 கீறல்கள் மற்றும் சிறிய பாதிப்புகளில் இருந்து திரையைக் காக்கிறது. இந்த ஸ்மார்ட் போன் Snapdragon 4 Gen 2 AE (Accelerated Edition) SoC மூலம் இயக்கப்படுகின்றது.
இது 8GB RAM வரை மற்றும் 16GB வரையிலான விரிவாக்க விருப்பங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. சேமிப்பு விருப்பங்களில் 128GB வரை உள்ளன. மேலும், 1TB வரை விரிவாக்கிக் கொள்ளலாம்.
இரண்டாம் நிலை சென்சார் பற்றிய விவரங்கள் இல்லாத நிலையில், Redmi 13 5G 108MP பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. இது உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்ய பயன்படுகிறது. இதில், 5,030mAh பேட்டரி திறனுடன், 33W பாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கின்றது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)