Muttai Thokku (Photo Credit: YouTube)

ஜூலை 12, சென்னை (Kitchen Tips): வீட்டில் வாங்கி வைத்திருக்கும் முட்டைகளை (Egg) எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக முட்டையை வைத்து எப்படி தொக்கு செய்து சாப்பிடுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சுவையான முட்டை தொக்கு (Muttai Thokku) சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இதனை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். Laughing Is Mandatory In Japan: 'ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரிக்க வேண்டும்' - ஜப்பான் அரசு அதிரடி உத்தரவு..!

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

தக்காளி, வெங்காயம் - தலா 2 கப் (நறுக்கியது)

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

கடுகு, பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா, மிளகு தூள் - தலா 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

இஞ்சி, இலவங்கப்பட்டை - சிறிய துண்டு

பூண்டு - 6 பல்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை மற்றும் நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.

பின்பு, அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். Lanka Premier League Season 5: லங்கா பிரீமியர் லீக் சீசன் 5.. இந்தியாவில் இருந்து பார்ப்பது எப்படி?!

அடுத்து சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் மற்றும் கரம் மசாலாவையும் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் வறுக்க வேண்டும்.

இதனிடையே, வேகவைத்த முட்டைகளில் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வேகவைத்த முட்டை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். முட்டையின் தோல் கொப்புளங்கள் வரும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.

அடுத்து இந்த முட்டைகளை, வெந்து கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து கிளறிவிடவும் அவ்வளவுதான் சுவையான காரமான முட்டை தொக்கு தயார்.