Xiaomi 14 Civi: இரட்டை செல்பி கேமராக்களை கொண்ட சியோமி 14 சிவி ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்..! அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
இந்தியாவில் வருகின்ற ஜூன் 20-ஆம் தேதி அன்று, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.
ஜூன் 14, சென்னை (Technology News): சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது சியோமி 14 சிவி ஸ்மார்ட் போனை (Xiaomi 14 Civi Smart Phone) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி சிவி 4 ப்ரோ (Xiaomi Civi4 Pro)போன், இந்திய சந்தையில் சியோமி 14 சிவி என மறுபெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை விவரம்:
இந்த ஸ்மார்ட் போன், 8GB RAM உடன் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.42,999 விலையில் கிடைக்கிறது, 12GB RAM உடன் 512GB ஸ்டோரேஜ் உள்ள போன் ரூ.47,999-க்கு கிடைக்கின்றது.
Cruise Blue, Shadow Black, Matcha Green வண்ண விருப்பங்களில் கிடைக்கும். மேலும், பிளிப்காரட், Mi.com, Mi Home Stores மற்றும் சியோமி ரீடெய்ல் பார்ட்னர்கள் மூலம் ஜூன் 20-ஆம் தேதி அன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். Road Accident CCTV Footage: கல்லூரி மாணவி பேருந்து சக்கரத்தின் கீழே விழுந்து உடல் நசுங்கி பலி; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
சலுகைகள்:
இந்த போன்களுக்கான முன்பதிவு கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று, மதியம் 2 மணி முதல் தொடங்கியுள்ளது. ICICI வங்கி கார்டுகளில் வாங்குபவர்களுக்கு உடனடி சலுகையாக ரூ.3000 கிடைக்கும். மேலும், சியோமி 14 சிவி ஸ்மார்ட் போனை வாங்குபவர்கள் மூன்று மாத YouTube சந்தாவையும் ஆறு மாதங்களுக்கு கூகுள் ஒன் (Google One) 100GB டேட்டாவையும் பெறுவார்கள்.
சிறப்பம்சங்கள்:
இந்த போன், Android 14 அடிப்படையிலான Hyper OS version-யில் இயங்குகிறது. இது 120Hz refresh rate, 240Hz touch sampling rate, 446ppi pixel density-யுடன் 1.K curved 6.55 inch AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இதில், HDR10+, Dolby Vision, Gorilla Glass Victus 2 protection, 4nm Snapdragon 8S Gen 3 SoC processor உள்ளது.
Summilux lens-உடன் Leica co-engineered டிரிப்ள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. 50MP லைட் பியூஷர் 800 இமேஜ் சென்சார், 2x zoom கொண்ட 50MP telephoto கேமரா, 120-டிகிரி field of view கொண்ட 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா உள்ளது.
மேலும், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இரண்டு 32MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், 4700mAh பேட்டரி திறன் கொண்ட, 67W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன், இந்த பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிட கூடிய வசதியில் கொடுக்கப்பட்டுள்ளது.