School Principal Banned: சுற்றுலா சென்ற இடத்தில் மாணவர்கள் குடித்துவிட்டு கும்மாளம்.. பள்ளி முதல்வருக்கு ஆப்பு..!

பனிச்சறுக்கு பயணத்தில் மாணவர்கள் கடையில் திருடுவது, மது அருந்துவது மற்றும் பாலியல் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கத் தவறிய பள்ளி முதல்வர் தடை செய்யப்பட்டுள்ளார்.

Trip (Photo Credit: Pixabay)

டிசம்பர் 20, நாட்டிங்ஹாம் (World News): நாட்டிங்ஹாமில் உள்ள சிபி ரிவர்சைடு பள்ளியில் முதல்வராக பணிபுரிந்த ஜஸ்டின் ட்ரூரி (வயது 52) என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து (Switzerland) பனிச்சறுக்கு பயண சுற்றுலாவிற்கு (Ski Trip) பொறுப்பாளராக இருந்தார். அப்போது, அங்கு பள்ளி மாணவர்கள் பலர் கடையில் திருடுவது, மது அருந்துவது மற்றும் உடலுறவில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தடுக்கத் தவறிய பள்ளி முதல்வர் அவரது பொறுப்பில் இருந்து தடை செய்யப்பட்டார். Cyclone Chido: ஆப்பிரிக்காவை சூறையாடிய சிடோ புயல்; பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீவிரம்..!

பள்ளி முதல்வர் தடை:

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பனிச்சறுக்கு பயணத்தின் சம்பவங்கள் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பின்னர், அவை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கற்பித்தல் ஒழுங்குமுறை நிறுவனத்திற்கு (TRA) பரிந்துரைக்கப்பட்டன. அதில், அவர் கலந்துகொண்ட அனைவருக்கும் பெற்றோரின் ஒப்புதலைப் பெறத் தவறியதாகவும், மாணவர்களின் நடத்தையை கண்காணிக்க தவறியதாகவும், மேலும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கூறியது. இதனையடுத்து, அவர் முதல்வர் பதவியில் இருந்து தடை செய்யப்பட்டார். மேலும் அவரது தடை உத்தரவு 5 ஆண்டுகளுக்குப் பிறகு மறுவிசாரணை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif