Cyclone Chido (Photo Credit: @anadoluagency X)

டிசம்பர் 19, ஆப்பிரிக்கா (World News): இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து, வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு ‘சிடோ’ (Chido) என பெயர் வைத்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. Nellai Youth Killed: சூப்பர்மார்கெட்டில் துப்பாக்கிசூடு; நெல்லை இளைஞர் ஜமைக்காவில் உயிரிழப்பு.! பதறவைக்கும் காட்சிகள்.!

சிடோ புயல்:

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ஏற்பட்ட சிடோ சூறாவளி புயல் ஆப்பிரிக்காவை (Southeast Africa) புரட்டிப்போட்டது. இந்த புயலின் காரணமாக குடிசை நகரங்கள் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் சரிந்தது. தண்ணீர், மின்சாரம் என அத்தியாவசிய தேவைகள் எதுவும் இல்லாமல் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதியுற்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிடோ புயல் பாதிப்பு:

புயலின் தாக்கம் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்களில் ஏற்பட்ட காரணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிடோ புயல் காரணமாக மொசாம்பிக் (Mozambique) நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இன்னும் பல பகுதிகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா? என்று மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 மொசாம்பிக் நாட்டில் சிடோ புயலின் தாக்கம்: