Taliban Bans Treatment: பெண்கள் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெற தடை விதிப்பு; தலிபான் நிர்வாகம் அதிர்ச்சி செயல்.!
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவரிடம் பெண்கள் சிகிச்சை பெற தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனவரி 12, காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் (Taliban Bans Male Doctor Treatment for Women) தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். முதலில் உலக நாடுகள் தலிபான் தலைமையிலான அரசாட்சியை எதிர்த்தாலும், பின்னாளில் லேசான இணைக்க சூழ்நிலை ஏற்பட்டது வருகிறது.
நாட்டில் இயங்கி வரும் பிற பயங்கரவாத குழுக்கள் (Afghanistan Terrorist Groups) வெளியேற தலிபான் ஆணையிட்டதும், அவர்களுக்கு இடையே நடந்த பதவி பிரச்சனையும் பின்னாளில் தாலிபான்களுக்கே பெரும் எதிர்ப்பாக அமைந்ததால், உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியை வழங்கி வருகிறது. RB Udhayakumar Latest Speech: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசு – முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!
இதற்கிடையில், அதிகாரத்தை கைப்பற்றியதும் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைபோட தொடங்கிய தலிபான்கள் கல்வி & வேலைவாய்ப்பு, பெண்களின் தொலைதூர பயணங்கள் போன்ற விஷயங்களில் முட்டுக்கட்டையாய் ஏற்படுத்த தொடங்கினர். உடற்பயிற்சி கூட்டங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆபகானிஸ்தானில் உள்ள பால்க் மாகாணத்தில் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் ஆண் மருத்துவர்களை பார்க்க, சிகிச்சை பெறக்கூடாது எனவும், உடல்நலக்குறைவுக்கு பெண் மருத்துவரையே சந்தித்து சிகிச்சை பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 12, 2023 08:25 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)