Taliban Thanks to India: ரூ.200 கோடி நிதிஉதவி வழங்கும் இந்தியாவிற்கு தலிபான்கள் நன்றி...!
இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் நிதிஉதவி இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யும் செய்யும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 03, காபூல்: கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால், 2023 - 24 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தேசிய அளவில் மேற்கொள்ளப்படவேண்டிய பல நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. அப்போது, ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நடவடிக்கைகளை ஊக்குவிக்க இந்தியா சார்பில் ரூ.200 கோடி நிதி உதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் உதவியை பெரியளவில் வரவேற்றுள்ள தலிபான்கள், தங்களின் நன்றிகளையும் தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து தலிபான் அதிகாரி சுஹில் சாஹேன் கூறுகையில், "இந்தியாவின் பட்ஜெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்டதற்கு நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் நிதிஉதவி இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யும். Air India Express Engine Flame: அபுதாபியில் இருந்து கேரளா புறப்பட்ட விமானத்தில் எஞ்சின் கோளாறு.. அவசர கதியில் அபுதாபியிலேயே தரையிறக்கம்.!
இதனால் ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இந்திய பங்களிப்புடன் நடைபெற்று வந்த பல திட்டங்கள் மீண்டும் செயல்பட தொடங்கும். இது இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தி, பிற அவநம்பிக்கையை நீக்குவதற்கு பேருதவி செய்யும். ஆப்கானிய மக்கள் தற்போது வேலையின்மை, வருமானமின்மை என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இத்தகைய சூழலில் சிறு உதவி கூட பேருதவி செய்யும். ஆப்கானிஸ்தானை வளம்பொருந்திய நாடாக உயர்த்தவேண்டும்.
கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினால், அங்கு இந்தியா அளித்து வந்த மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இன்று வரை தொடர்ந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு தரமான கோதுமை, தடுப்பூசிகள் விநியோகம் என பல விதங்களில் இந்தியா உதவுகிறது. பாகிஸ்தான் நாட்டில் பிரதமராக இம்ரான் இருக்கும் போது விநியோகம் செய்யப்பட்ட கோதுமை குப்பையாக இருந்ததாக ஆப்கானிய தலிபான்கள் குற்றச்சாட்டை முன்வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.