Zelensky US Visit: போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்ட அமெரிக்கா.. அடம்பிடித்த உக்ரைன் அதிபர்.. வந்தவழியே ஆவேசத்துடன் புறப்பாடு.!

நேட்டோ படையுடன் எப்படியாவது இணைந்து விடவேண்டும் என முயற்சி எடுத்து வரும் ஜெலன்ஸ்கியும், அதனால் தொடரும் ரஷியாவின் தாக்குதலும் என உலகளவில் மூன்றாவது உலகப்போர் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

Ukraine President Volodymyr US Visit and Met with US President Donald Trump and Dy President in White House (Photo Credit: @WhiteHouse X)

மார்ச் 01, வெள்ளை மாளிகை (World News): ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து, தனி நாடாக இருக்கும் உக்ரைன், தற்போது ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு படையான நேட்டோவுடன் இணைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க, உக்ரைன் அரசின் முடிவுக்கு ரஷ்யா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தனது முடிவில் உக்ரைன் நாடு உறுதியாக இருந்ததால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) உத்தரவின் பேரில், உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்துச் சென்றது.

பொருளாதார தடையை சமாளித்த ரஷ்யா:

உக்ரைன் - ரஷ்யா பேர் (Ukraine Russia War) மூன்று ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. இரண்டு தரப்பிலும் இராணுவ, மனித, பொருள் இழப்புகள் தொடருகிறது. உக்ரைன் மண்ணுக்கு அமெரிக்கா, ஐரோப்பியா உட்பட நாடுகள் நேரடியாக களமிறங்கி போரில் ஈடுபட்டால் மிகப்பெரிய அழிவை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ரஷியா போரின் தொடக்கத்திலேயே பகிரங்கமாக எச்சரித்து இருந்த காரணத்தால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ தளவாடம், நிதி உதவி செய்து வந்தது. ரஷ்யாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு பொருளாதார தடை விதித்தது. உலக நாடுகள் பொருளாதார தடை விதித்ததாலும், ரஷ்யா தனது நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, சீனா, வடகொரியா உட்பட பல நாடுகளுடன் நேரடி வணிகம் மேற்கொண்டு பொருளாதார தடையை சமாளித்தது.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பால் மாறிப்போன போர்க்களம்:

முந்தைய ஜோ பைடன் (Joe Biden) அரசு காலத்தில், அமெரிக்காவில் இருந்து 350 மில்லியன் டாலர் மதிப்புடைய நிதி, அமெரிக்காவின் சொந்த இராணுவ தளவாடங்கள் ஆகியவை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த உதவிகள் அனைத்தையும் நிறுத்தினார். இதனால் உக்ரைனில் இருக்கும் கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுப்ப இயலாது என மிரட்டும் தோனியில் உக்ரைன் அதிபர் சமீபத்தில் பேசி இருந்தார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, கனிமவளத்தை உக்ரைனில் இருந்து பெற, ஒப்பந்தம் பதிவிட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருந்தார். IT Employee Dies By Suicide: 'மனைவியின் தொல்லை தாங்கமுடியவில்லை' - வீடியோ பதிவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை..! 

கருத்தில் உறுதியாக இருந்த உக்ரைன் அதிபர்:

இந்த பயணத்தின்போது, வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரில் வந்து அழைத்துச் சென்றார். இருவரும் ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டது. அதற்கு முன்னதாக உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி பேச்சுவார்த்தை உடன்படிக்கையில் கையெழுத்திட டொனால்ட் ட்ரம்ப் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபரின் அறிவுரை மற்றும் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.

அமைதிப்பேச்சுவார்தைக்கு சரி என்றால் வாருங்கள்:

இதனால் ஒருகட்டத்தில் ஆவேசமான அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "அமெரிக்கா உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக முந்தைய அரசு நிர்வாகத்தில் செயல்பட்டு 350 மில்லியன் டாலர் நிதி உதவி செய்தது, இராணுவ தளவாடங்களை வழங்கியது. முந்தைய முட்டாள் அதிபர் இராணுவ தளவாடங்கள், நிதிஉதவி வழங்காத பட்சத்தில், உக்ரைன் ரஷியா போர் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வந்திருக்கும். நீங்கள் இப்போது எடுத்துள்ள வழிமுறை நல்லதல்ல. நீங்கள் பல மில்லியன் மக்களின் உயிருடனும், சொந்த நாட்டு மக்களின் உயிருடனும் விளையாடுகிறீர்கள். நீங்கள் அமைதி உடன்படிக்கை பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும்போது மீண்டும் வரலாம். உங்களுக்காக அமெரிக்கா எப்போதும் காத்திருக்கும்.

உலகமே பரிதவிப்பு:

இதே எண்ணத்தில் நீங்கள் இருந்தால், போரை தொடர விரும்பினால், கட்டாயம் மூன்றாம் உலகப்போருக்கு நீங்கள் காரணமாக இருந்துவிடுவார்கள்" என கூறினார். இது உக்ரைன் அதிபருக்கு ஆவேசத்தை ஏற்படுத்த, அவர் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டார். மேலும், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தனித்தனியே தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். உக்ரைன் நாட்டில் காமெடி நடிகராக மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று, இன்று போரின் காரணமாக அந்நாட்டு மக்களின் தவிர்க்க முடியாத அதிபர்களில் ஒருவராக இருக்கும் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, உண்மையில் மூன்றாம் உலகப்போருக்கு காரணமாக அமைவரா? அல்லது உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் செயல்படுவாரா? என்பதை உலகமே எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி-ஐ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவேற்ற காட்சி (Ukraine President Volodymyr Zelensky US Visit):

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜெடி வென்ஸ் ஆகியோர், உக்ரைன் அதிபருடன் கலந்துரையாடிய காணொளி:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now