Earthquake: அமெரிக்காவில் அடுத்தடுத்த 2 நாட்களில் அதிபயங்கர நிலநடுக்கம்; மக்கள் பெரும் அச்சம்..!
மத்திய அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா மற்றும் எல் சாவடார் உட்பட பல பசுபிக் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 19, எல் சால்வடார் (World News): கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்களுக்கு அச்சத்தை தரும் வகையில் சுனாமி அலைகள் எந்த விதமான பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அலாஸ்காவில் அடுத்தடுத்து இவ்வாறான நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வருவது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்ச உணர்வை தருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் கல்ப் ஆப் சால்வடார் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. MLA Abu Azmi: வந்தே மாதரத்தை மதித்தாலும் படிக்கமாட்டேன்; அல்லாஹ்வுக்கு மட்டுமே தலைவணங்குவேன் – மகாராஷ்டிரா எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து.!
ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகள் என்ற மதிப்பில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம், மத்திய அமெரிக்கா வரை எதிரொலித்துள்ளது. மத்திய அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா மற்றும் எல் சாவடார் உட்பட பல பசுபிக் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எல்-சாவடாரிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இதனால் எல் சால்வடார் நாட்டில் இருக்கும் பல வணிக வளாகங்கள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.