Snow Storm America:விரட்டியடிக்கும் பனிப்புயலால் முடங்கும் அமெரிக்கா.. 60 பேர் பரிதாப பலி.. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பயங்கரம்.!

அதேபோல, அந்நாட்டு மக்களும் குளிர் காலங்களில் பெரும் துன்பத்தை சந்திக்கின்றனர். சிலர் மரணிக்கின்றனர். அப்படியான துயரம் மீண்டும் நடந்துள்ளது.

America Snowfall 2023

டிசம்பர் 27, அமெரிக்கா: ஒவ்வொரு பனிக்காலத்தில் (Snow Season America) அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன. அதேபோல, அந்நாட்டு மக்களும் குளிர் காலங்களில் பெரும் துன்பத்தை சந்திக்கின்றனர். சிலர் மரணிக்கின்றனர். அப்படியான துயரம் மீண்டும் நடந்துள்ளது.

அமெரிக்காவை பொறுத்தமட்டில் குளிர்காலத்தில் பனிப்புயலானது மக்களை வாட்டி வதைக்கும். நடப்பு ஆண்டில் பனிப்புயலால் நியூயார்க் நகரின் பல சாலைகள் மூடிக்கிடக்கின்றன. 25 சென்டிமீட்டர் அளவில் பணிகள் குவிந்துள்ள காரணத்தால் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. வீடுகளில் இருக்கும் வாகனமும் பனிக்குள் புதைந்துள்ளன. Pongal Sugarcane: “ரேஷன் கடைகளில் கரும்பு வழங்க உத்தரவிடுக” – கடலூர் விவசாயி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.! 

அங்குள்ள இயல்பு வெப்பநிலை சுழியத்திற்கும் (0) கீழே குறைந்துள்ள காரணத்தால், வீதிகளில் மக்கள் நடமாட்டம் என்பது இல்லாமல் உள்ளன அங்குள்ள பல மாகாணங்கள் புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால், புயலில் சிக்கியோரை மீட்கும் பணியில் அரசு இறங்கியுள்ளது. மீட்பு படையினர் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்புயல் வீசிவரும் காரணத்தால், விமான சேவையும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 2,497 சர்வதேச விமான பயணங்கள், 3,410 உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மொத்தமாக 15 ஆயிரம் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 60 பேர் பனியால் உயிரிழந்து இருக்கின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 27, 2022 06:26 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif