Indian American Nominated Brigadier General: இந்திய வம்சாவளியை நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் மூத்த ஜெனரல் பொறுப்பில் பணியமர்த்த ஜோ பைடன் பரிந்துரை.!

இதற்கான பரிந்துரையை அமெரிக்க செனட் சபை முன் அதிபர் ஜோ பைடன் வைத்துள்ளார்.

Raja Chari American Indian

ஜனவரி 27, நியூயார்க்: அமெரிக்காவில் (America) ஜோ பைடனின் (President Joe Biden) ஆட்சி நிர்வாகத்தில் இந்தியர்கள் (Indian Citizens) மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு (American Indians) பல்வேறு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. பல அமெரிக்காவாழ் இந்தியர்கள் அரசின் உயர்பதவிகளில் பணியமர்த்தப்படுவது உலகளவில் இந்தியர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக கவனிக்கப்படுகிறது.

இந்திய-அமெரிக்க விண்வெளி வீரரான ராஜா சாரியை (Raja Chari) நிலவு தொடர்பான (Moon Mission) ஆராய்ச்சி பயணக்குழுவில், விமானப்படை பிரிகேடியர் ஜெனரலாக (Air Force Brigadier General) பதவி உயர்வு வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பரிந்துரையை பாதுகாப்புத்துறை மற்றும் செனட் சபைக்கு வழங்கி இருக்கிறார். Sania Mirza Statement on Grand Slams: கிராண்ட் ஸ்லாம்ஸ் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்ஸா அறிவிப்பு.! தோல்விக்கு பின் கண்ணீருடன் பேச்சு.!! 

அமெரிக்க அதிபரின் பரிந்துரையை அமெரிக்காவின் மூத்த குடிமக்கள், இராணுவ நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கும் செனட் சபை உறுதி செய்துவிடும் பட்சத்தில், விமானப்படை பிரிகேடியர் ஜெனரலாக ராஜா சாரி பொறுப்பேற்பார். நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (NASA & Space X) பிப்ரவரி 26ல் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறது.

ராஜா சாரி சந்திரனுக்கு சென்று திரும்பும் விண்வெளி வீரர்களின் ஆர்ட்டெமிஸ் குழுவில் இடம்பெற்று இருக்கிறார். அவர் கடந்த 2021ல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா குழுவை வழிநடத்தினார். விண்வெளியில் 177 நாட்கள் பணியாற்றியிருந்தார். இவர் அமெரிக்காவிலேயே ஏரோநாடிகள் படிப்பில் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 27, 2023 11:59 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).