Hardeep Singh Nijjar's Killing: இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவை அழைக்கும் கனடா; தயங்கும் வல்லரசுகள்.!

கடந்த 2023 ஜூன் 18ம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புப்படை அதிகாரிகள் நடத்திய விசாரணையைத்தொடர்ந்து, கொலைக்கு பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Khalistani Tiger Force Leader Hardeep Singh Nijjar (Photo Credit: Twitter)

செப்டம்பர் 20, ஒட்டாவா (World News): இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர், கனடாவில் கடந்த 2020ல் குடியேறி, அந்நாட்டு பிரஜையாக வாழ்ந்து வருகிறார். இவர் தன்னை தீவிர காலிஸ்தானிய ஆதரவாளராக வளர்த்துக்கொண்டு, பின் காலிஸ்தானிய புலிகள் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

கடந்த 2023 ஜூன் 18ம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புப்படை அதிகாரிகள் நடத்திய விசாரணையைத்தொடர்ந்து, கொலைக்கு பின்னணியில் இந்திய அரசு (கனடாவில் உள்ள ரா அமைப்பின் தலைவர்) இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, ஹர்தீபின் கொலைக்கு பின்னணியில் இந்திய அரசு உள்ளது. அவர்கள் அந்நிய மண்ணில் இவ்வாறான செயலை செய்திருக்கக்கூடாது. அதற்கு கடும் கண்டனத்தை நான் தெரிவிக்கிறேன். இந்திய ராஜதந்திரி நாட்டில் இருந்து வெளியேற உத்தரவுகிறேன் என கூறினார். Muslim Man Beaten at Hindu Temple: முஸ்லீம் பெண்ணுடன் இந்து கோவிலுக்குள் என்ன வேலை? – இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்ட வாலிபர்.!  

Canada PM Justin Trudeau (Photo Credit: Twitter)

இந்த விசயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இந்தியா அயல் மண்ணில் எவ்வித தீங்குக்குரிய செயலிலும் எடுபடவில்லை. கனடா பிரதமர் மற்றும் அவரின் அமைச்சரவை வைத்த குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம் என தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தை இந்தியாவுக்கு எதிரான கண்டனத்தை தெரிவிக்க அணுகியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்-கையும் அணுகியுள்ளனர். ஆனால், அவர்களின் தரப்பில் இருந்து பதில் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிராக இருபெரும் வல்லரசுகள் பேச மறுப்பதாகவும் கனடாவில் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் ஹர்தீப் சிங் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆவார். அவர் சாமியாரை பஞ்சாபில் கொலை செய்த குற்றத்திற்காகவும், அந்நிய மண்ணில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான குற்றச்சாட்டுகளையும் கொண்டுள்ளார்.

Narendra Modi (Photo Credit: @ANI Twitter)

கடந்த வாரம் நடைபெற்ற ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிலும் கனடா பிரதமர் இந்திய பிரதமருடன் கலந்து உயர்மட்ட ஆலோசனை நடத்த மறுத்துவிட்டதாகவும் தெரியவருகிறது. இதற்கு பின்னணியில் இன்று கனடா நாட்டவராக கருதப்படும் ஹர்தீபின் கொலையே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா ஜி20 நாடுகள் மாநாட்டின்போது தீவிரவாதத்திற்கு எதிராக தனது குரலை பதிவு செய்த நிலையில், சீக்கியர்கள் வாழ்ந்து வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உட்பட பிற நாடுகள் அரசுகளை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தது என கூறப்படுகிறது. ஹர்தீப் விவகாரத்தை கனடா ஐநா மன்றம் வரை கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரியவருகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now