China Shocker: மழலையர் பள்ளியில் வெறியாட்டம்; 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொடூர கொலை; 25 வயது இளைஞர் வெறிச்செயல்.!

வு-வை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியுடன் இளைஞர் பள்ளி வளாகத்தை சுற்றிலும் வலம்வந்த வீடியோ பொதுமக்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது.

Kindergarden Attack Visual (Photo Credit: Twitter)

ஜூலை 10, பெய்ஜிங் (China News): சீனாவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் குங்டோங் (Guangdong) மாகாணம், லிஙஜிங் (Lianjiang) நகரில் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை பள்ளியில் தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் பலரும் வகுப்புகளில் அனுமதித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த 25 வயதுடைய இளைஞர் வு (Wu) என்பவர், நிகழ்விடத்தில் இருந்த ஆசிரியர், 2 பெற்றோர், 3 குழந்தைகள் என 6 பேரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார். Hyderabad Horror: ஆணுறுப்பை துண்டித்து மருத்துவ மாணவர் மரணம்; மனநல பாதிப்பால் நடந்த பயங்கரம்.. ஹைதராபாத்தில் அதிர்ச்சி.!!

உள்ளூர் நேரப்படி காலை 07:30 மணியளவில் மேற்கூறிய சம்பவம் நடந்துள்ளது. 25 வயதாகும் இளைஞர் கொலை வெறி சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் எதற்காக அனைவரையும் கொலை செய்தார்? என்ற விபரங்கள் தெரியவில்லை.

வு-வை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியுடன் இளைஞர் பள்ளி வளாகத்தை சுற்றிலும் வலம்வந்த வீடியோ பொதுமக்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது.

சீனாவில் மழலையர் பள்ளிகளில் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுவது இது முதல்முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement