China Taiwan Issue: "தைவான் நாடும் இல்லை, இன்னும் நாடாகாது" - மீண்டும் பற்றியெரியும் தைவான் விவகாரம்; சீனாவின் விடாப்பிடி.!
ஜப்பானின் பிடியில் இருந்து 1945 உலகப்போருக்கு பின் தைவானுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்தாலும், சீனாவின் ஆதிக்கம் தொடருவதால் தைவான் உலக அரங்கில் இன்று வரை போராடி வருகிறது.
ஆகஸ்ட் 22, பெய்ஜிங் (World News): சீனாவிற்கு மிக அருகில் தைவான், பெங்கு, கின்மென் மற்றும் மாட்சு (Taiwan, Penghu, Kinmen, Matsu) தீவுக்கூட்டடங்களை உள்ளடக்கிய தைவான், தன்னை தனி நாடாக அங்கீகரிக்க பல ஆண்டுகளாக போராடி வருகிறது.
1945ல் இரண்டாம் உலகப்போர் நிறைவுபெறும் வரையில் ஜப்பான் நாட்டின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த தைவானுக்கு ஜப்பான் விடுதலை அளித்தாலும், சீனா தனக்கு மிக அருகில் இருக்கும் தைவானும் தனது நாட்டின் அங்கமே என தகராறு செய்து வருகிறது.
இந்த விவகாரத்தில் சீனாவுடன் இணைய உடன்பாடு இல்லாத தைவானிய மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து, பல ஆண்டுகளாக அதனை தொடர்ந்து வருகின்றனர். கடந்த தென்சீன கடலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனா தைவானை விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை. BRICS Summit 2023: 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி..! விபரம் உள்ளே.!
ஆனால், தென்சீன கடலில் சீனா ஏற்படுத்தும் பல சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அமெரிக்கா எப்போதும் எதிர்ப்பை வெளிப்படையாக பதிவு செய்து வருகிறது. தைவானின் விவகாரத்திலும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டுள்ள அமெரிக்கா, சீனாவை பலமுறை எச்சரித்தும் இருந்தது.
இந்நிலையில், சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள்ள செய்திக்குறிப்பின்படி, "தைவான் என்ற நாடு இல்லை, இன்னும் இருக்கப்போவது இல்லை" என்பது தெளிவாகிறது. இதனால் சீனா தைவானை தனது நாட்டின் அங்கமாகவே கருதுகிறது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இக்கருத்து மீண்டும் தென்சீன கடல் பகுதியில் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.