Eurozone Slips Into Recession: வரலாற்றில் இல்லாத அளவு சரிவை சந்திக்க தொடங்கிய யூரோ.. சர்வதேச அளவில் அதிர்ச்சியை தந்த தகவல்கள்.!
சர்வதேச அளவில் அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு இணையான அந்தஸ்தை பெற்ற யூரோவுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூன் 08, லண்டன் (World News): செலவினங்கள் அதிகரிப்பு, அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக யூரோவை பயன்படுத்தி வந்த 20 நாடுகள் மந்த நிலையை சந்தித்துள்ளன. இன்று சி.என்.என் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நடப்பது ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் (Eurozone Countries) பொருளாதார (Eurozone Recession) உற்பத்தி என்பது கடந்த காலாண்டை காட்டிலும் 0.1% குறைந்து இருக்கிறது. அதேபோல, 2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
2 காலாண்டுகளில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இன்று யூரோ மதநிலையை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த ஐரோப்பிய பொருளாதாரம் சரிவை சந்திக்காமல் தப்பித்தது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் 0.2% வீழ்ச்சியடைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 0.1% உயர்ந்தது.
யூரோவின் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய பொருளாதார நிபுணர் ஆண்ட்ரூ கென்னிங்ஹாம், "அதிக விலை மற்றும் வட்டி விகிதம் காரணமாக குடும்பத்தின் நுகர்வு பாதிக்கப்பட்டுள்ளது" என கூறினார். உக்ரைன் - ரஷியா விவகாரத்தில் ரஷியா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தியது.
இதனால் பணவீக்கமும் கடந்த ஆண்டில் உயர்ந்த நிலையில், விலை பின்னாட்களில் குறைக்கப்பட்டாலும் மே மாதம் நுகர்வோர் விலை என்பது ஆண்டுக்கு 6.1% உயர்ந்து இருந்தது. அரசின் செலவினம் வீழ்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு போன்ற பல காரணங்களால் யூரோ சரிவை சந்தித்துள்ளது.
யூரோ பணத்தை ஆஸ்திரியா, பெல்ஜியம், குரோஷியா, சைப்ரஸ், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெயின். பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உபயோகம் செய்கின்றன.
அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிப்பார்த்த யூரோ பொருளாதாரம், இன்று அமெரிக்காவை விட பின்னுக்கு சென்றுள்ளது. கடந்த காலாண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்த உயர்வு 0.3% என்ற நிலையில் உள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாடு தரவுகளினால் அமெரிக்காவின் பொருளாதாரம் தனக்கு சாதகமானது. முந்தைய காலாண்டை விட ஜனவரி - மார்ச் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் 1.3% உயர்ந்துள்ளது.