Meta Layoff: 4 ஆயிரம் உயர்திறன் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது மெட்டா.. முகநூல் நிறுவனத்தின் அதிரடி.!
முன்னதாக 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 19, சான் பிரான்ஸ்சுகோ (San Francisco): முகநூல் (Facebook) நிறுவனம் வாட்சப் (WhatsApp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) நிறுவனங்களை உள்ளடக்கி மெட்டா (Meta) என்ற நிறுவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது. முகநூல் மெட்டவாக மாறிய நாட்கள் முதலாக பல்வேறு செயல்கள் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டன.
பயனர்களின் தனியுரிமை கொள்கை, உபயோகிக்கும் வசதி உட்பட பல சாராம்சங்களில் முன்னேற்றம் வரும் நிலையில், அதற்கு ஈடாக நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். Madurai Kamarajar University: பல்கலை.,யில் மாணவிகளை ஆபாசமாக, அவதூறாக பேசிய பேராசிரியர் கருப்பையா கைது.. மாணவர்களின் புகார் எதிரொலி.!
நடப்பு வாரத்தில் மொத்தமாக 4 ஆயிரம் உயர்திறன் பணிகளை கவனிக்கும் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப குழுவில் இருந்த பலரையும் பணி நீக்கம் செய்துள்ள மெட்டா, புதியவர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தி இருக்கிறது.
குறைந்தபட்ச பணியாளர்களுடன் அதிக திறனுடன் இயங்க திட்டமிட்டுள்ள மெட்டா நிறுவனம், தனது வேகத்திற்கு ஈடு கொடுக்காத பல தொழிலாளர்களை பாரபட்சமின்றி வேலை நீக்கம் செய்து வருகிறது எனவும் கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் தலைவராக இன்று வரை மார்க் (Mark Zuckerberg) செயல்பட்டு வருகிறார்.