Shocking Video: மக்கள் கூட்டத்தின் நடுவே தறிகெட்டு புகுந்த கார்; 2 பேர் பலி., 68 பேர் படுகாயம்..! பதறவைக்கும் காட்சிகள்.!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மக்கள் அனைவரும் பொருட்கள் வாங்குவதில் மும்மரமாக இருக்க, கார் ஒன்று தறிகெட்டு புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் பலியாகினர், 68 பேர் காயம் அடைந்தனர்.
டிசம்பர் 21, மாக்டெபர்க் (World News): உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை (Christmas 2024) கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை தங்களின் பாராம்பரியபடி கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, ஜெர்மனி நாட்டில் உள்ள மாக்டெபர்க் (Magdeburg) நகரில், கிறிஸ்துமஸ் பண்டிகை பொருட்களை வாங்க சந்தை நடத்தப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டத்தில் புகுந்த கார்:
நேற்று உள்ளூர் மக்கள் பலரும் திரளாக சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்த நிலையில், சாலையில் நின்ற மக்கள் கூட்டத்தின் நடுவே (Germany Car Rammed) திடீரென கார் ஒன்று புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. தறிகெட்டு அதிவேகத்தில் வந்த கார், சாலையில் நின்ற மக்களின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 68 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் & மீட்புப்படையினர், பாதுகாப்பு & மீட்பு பணியில் ஈடுபட்டனர். International Human Solidarity Day 2024: சர்வதேச மனித ஒற்றுமை தினம்.. வரலாறும் முக்கியதுவங்களும்..!
2 பேர் மரணம், 68 பேர் காயம்:
காயமடைந்த 68 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், இவர்களில் 15 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். 37 பேர் கவலைக்கிடமான காயத்துடனும், 15 பேர் லேசான காயத்துடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது வரை இந்த விபத்தில் 2 பேர் பலியாகி இருப்பதாகவும், 68 பேர் மொத்தமாக காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிக்கு வலைவீச்சு:
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியவர், உள்ளூரில் முன்னதாக மருத்துவராக வேலை பார்த்து வந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் வேறு நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். தற்போது ஜெர்மனியில் தங்கி இருக்கிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் அதே வேளையில், குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை வைத்து அடுத்த அரசியல் சர்ச்சை ஜெர்மனியில் எழுந்துள்ளது.