Breaking: தரையிறங்கும்போது வெடித்துச் சிதறிய விமானம்; 105 பயணிகளின் நிலை என்ன? கஜகஸ்தானில் துயரம்.!

பயணிகளின் நிலை தெரியவில்லை.

Kazakhstan Aktau Airport Flight Crash on 25-Dec-2024 (Photo Credit: @cheguwera X)

டிசம்பர் 25, அஸ்தானா (World News): அஜர்பைஜான் நாட்டில் இருந்து, ரஷ்யாவில் உள்ள குரோஸ்னி நகருக்கு, இன்று 105 பயணிகளுடன் அசர்பைஜான் (Azerbaijan Airlines Embraer E190AR) நாட்டுக்கு சொந்தமான விமானம் E190AR J28561 பயணம் செய்தது. இந்த விமானம் கஜகஸ்தான் (Kazakhstan) நாட்டின் வழியே, அக்டாவு பகுதியை கடந்து சென்றது. அச்சமயம் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் அக்டாவு விமான நிலையத்தை சில முறைகள் வானில் வட்டமிட்ட நிலையில், அவசர தரையிறக்கம் நடைபெற்றது. Road Safety: இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. சாலை பாதுகாப்பு குறித்த வீடியோ வைரல்..! 

விமானம் விழுந்து நொறுங்கி விபத்து:

அப்போது, விமானம் தரையிறங்கும்போதே திடீரென வெடித்துச் சிதறி இருக்கிறது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. விமானம் தரையிறங்கும்போதே வெடித்து சிதறிய காரணத்தால், பயணிகள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேற்படி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

விமானம் விழுந்து நொறுங்கும் பதறவைக்கும் காணொளி:

அவசர கதியில் விமானம் தரையிறக்கப்ட்ட நிலையில், விமானம் விழுந்து நொறுங்கும் காட்சிகள்:

72 பயணிகளின் நிலை தெரியாததால் அதிர்ச்சி: