Kuala Lumpur Gas Leak: கோலாலம்பூர் விமான நிலையத்தில் திடீர் ரசாயன கசிவு; 39 பேர் உடல்நலக்குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

விமான நிலையத்தின் பொறியியல் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கியாஸ் டேங்க் கசிந்து ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 39 பேர் பாதிக்கப்பட்டனர்.

Kuala Lumpur Airport (Photo Credit: @IndiaToday X)

ஜூலை 05, கோலாலம்பூர் (World News): மலேசியாவில் உள்ள கோலம்பூர் நகரில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான விமான பயணிகள் தினந்தோறும் பயணம் செய்கின்றனர். அதேபோல, அவர்களின் வருகை, புறப்பாடு உட்பட விமான நிலைய பணிகளை கவனிக்க ஆயிரக்கணக்கான அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர். விமான நிலைய வளாகத்திலேயே விமானங்கள் பழுது பார்க்கும் மையமும் உள்ளது. இதனிடையே, இன்று கோலாலம்பூர் விமான நிலையத்தின் பொறியியல் நிலைய பகுதியில், ரசாயன கசிவு (Gas Leak in Airport) ஏற்பட்டதன் காரணமாக 39 பேர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டனர். இதனால் பயணிகள் யாரும் பாதிக்கவில்லை எனினும், விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை. அங்குள்ள உள்ளூர் நேரப்படி காலை 11:23 மணியளவில் விமான பொறியியல் நிலையத்தில், திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. Special Bus for Weekend: வார இறுதி, அமாவாசை தினங்கள்.. கிளம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.! 

39 பேர் உடலநலக்குறைவால் பாதிப்பு:

இதனையடுத்து, அவசர அழைப்பை ஏற்றுக் கொண்டு, விமான நிலைய மீட்புப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விமான நிலைய வளாகத்தில் பொறியியல் வசதிக்கான பிரிவில் இந்த சம்பவம் நடந்தாலும், அது தனியாக இருப்பதால் பயணிகள் மற்றும் விமான நிலைய குழுவினருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கு பணியாற்றி வந்த 39 பேர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். இவர்களில் தலை சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனை ஏற்பட்டு அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். விசாரணையில், மெத்தில் கேப்டன் விஷவாயு கசிந்ததன் காரணமாக இந்த விளைவு ஏற்பட்டுள்ளது உறுதியானது. விமான எரிபொருளான பெட்ரோலிய வாயுடன் வாசனைக்காக சேர்க்கப்படும் இந்த திரவம் அதிகளவு கசிந்ததால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கசிவு ஏற்பட்ட தொட்டியானது உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு இருக்கிறது.