Car Rally for PM Modi in US: "மீண்டும் மோடி, வேண்டும் மோடி" - அமெரிக்காவே அதிர இந்தியர்களின் அசத்தல் பேரணி.. அமெரிக்காவிலும் மோடி மந்திரம்.!

பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் பாஜக கொடி மற்றும் அடுத்தும் மோடி அரசாங்கம் என்ற வாசகத்துடன் காரில் பேரணி மேற்கொண்டார்.

PM Modi Support from US (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 01, மேரிலேண்ட் (World News): இந்தியாவில் 2024 மக்களவை பொதுத்தேர்தல் (2024 Parliament Elections) 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்று முடிகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் திறம்பட செயல்படுத்தி இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடும் கட்சிகள் ஒருபுறம், மக்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் பணம் வழங்குதலை தடுக்க அதிகாரிகளின் பறக்கும்படை மற்றொருபுறம் என அரசியல்களம் சூடேறி இருக்கிறது.

விறுவிறுப்பாகும் இந்திய தேர்தல்களம்: தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக ஏற்படுத்தியுள்ள பாரதிய ஜனதா கட்சி, தொடர்ந்து தனது கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோரை நேரடியாக களமிறக்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narendra Modi) மாநில அளவில் பல்வேறு திட்ட பயணங்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். CSK Vs DC Highlights: வின்டேஜ் தோனி வந்தும் வெற்றி வரலையேப்பா.. வெறித்தனமான ரசிகர்களின் உற்சாகத்துடன் தோல்வியடைந்த சென்னை அணி..! 

PM Modi Support from US (Photo Credit: @ANI X)

பிரதமர் மோடிக்கு ஆதரவாக கார் (Car Rally in US to Support PM Modi) பேரணி: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்பார். 400 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் வசித்து வரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சீக்கியர்கள் கார் பேரணி மேற்கொண்டனர். இதன் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.